1. கால்நடை

மாடுகளின் வயதை பற்களை கொண்டு அறிவது எப்படி என்று தெரியுமா?

KJ Staff
KJ Staff
babay cow

கால்நடை வளர்ப்பு லாபகரமாக அமைய இளம் வயதுள்ள மாடுகளையே  தேர்வு செய்வது மிகவும் முக்கியமானதாகும். மாடுகளின் வயதை அவற்றின் பற்களின் எண்ணிக்கையைக் கொண்டு எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

மாடுகளின் வயதை பற்கள் முளைத்தல், பற்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் கொம்புகளில் ஏற்படும் வளையங்களை வைத்து தோராயமாக நிர்ணயித்து விடலாம். மாடுகளின் பற்களில் தற்காலிக பற்கள் மற்றும் நிரந்தரமான பற்கள் என்று இரண்டு வகை உண்டு. மாடுகளின் பற்களில் முன் வெட்டு பற்கள், முன் கடைவாய் பற்கள் மற்றும் தாடை வாய் பற்கள் என்று மூன்று வகை உண்டு. மாடுகளுக்கு கோரைப் பற்கள் கிடையாது. மேல் தாடையில் முன் வெட்டு பற்களுக்கு பதிலாக வெறும் ஈறு மட்டுமே காணப்படும்.

 மாடுகளில் தற்காலிக பால் பற்களாக கீழ்த்தாடையில் 4 ஜோடி முன் வெட்டு பற்கள், 3 ஜோடி முன் கடைவாய் பற்கள் சேர்த்து மொத்தம் 14 பற்களும், மேல் தாடையில் 3 ஜோடி முன் கடைவாய் பற்கள் மட்டும் கொண்டு 6 பற்களும் இருக்கும். அதாவது, மாடுகளில் மொத்தம் 20 தற்காலிக பற்களும் இருக்கின்றன. மேலும், நிரந்தர பற்களாக கீழ்த்தாடையில் 4 ஜோடி முன் வெட்டு பற்கள், 3 ஜோடி முன் கடைவாய் பற்கள் மற்றும் 3 ஜோடி கடைவாய் பற்களும் சேர்ந்து 20 பற்கள் இருக்கின்றன. முன் கடைவாய் பற்களும், கடைவாய் பற்களும், கீழ்த்தாடையில் உள்ளவை போலவே அமைந்து மேல் தாடையில் 12 பற்கள் இருக்கின்றன. ஆக மொத்தம் மாடுகளில் 32 நிரந்தர பற்கள் இருக்கின்றன.

Aging Organ

மாடுகளில் மேற்கண்டவாறு எண்ணிக்கையில் பற்கள் இருந்தாலும், அவற்றின் கீழ்த்தாடையில் உள்ள 4 ஜோடி முன் வெட்டு பற்களை வைத்து தான் அதன் வயது நிர்ணயிக்கப்படுகிறது. மாடுகளின் வயதை கண்டுபிடிக்க, அவற்றின் கீழ்த்தாடையின் உதடுகளை சிறிது விலக்கினால் கீழ்த்தாடை பற்கள் தெளிவாக தெரியும். இந்த பற்களின் எண்ணிக்கையை கொண்டு வயதை நிர்ணயிக்கலாம்.

பொதுவாக, கன்று பிறந்தவுடன் கீழ்த்தாடையின் மையத்தில் இரண்டு பற்கள் காணப்படும். பின்பு இரண்டு வார வயதில் அவற்றை அடுத்து பக்கத்திற்கு ஒன்றாக பல் முளைக்கும். மூன்றாவது வார வயதில் அவற்றை அடுத்தாற் போல் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு பல் தோன்றும். 4-வது வார முடிவில், அதாவது ஒரு மாதத்தில் மொத்தம் 8 பற்கள் கீழ்த்தாடையில் இருக்கும். இந்த பற்கள் தற்காலிக பால் பற்களாகும்.

Cow teeth

 கீழ்த்தாடை பற்கள் அமைப்பு

  • மாடுகளின் வயதை நிர்ணயிக்க பயன்படும் இந்த தற்காலிக கீழ்த்தாடை பால் பற்கள், வெண்மை நிறத்துடன், ஆடும் தன்மை கொண்டதாக இருக்கும். இவை விழுந்த பின் புதிதாக நிரந்தர பற்கள் முளைக்கும். ஒரு ஆண்டு வயதில் கீழ்த்தாடையில் உள்ள தற்காலிக முன் வெட்டும் பற்களில் அதிக தேய்மானம் காணப்படும். தற்காலிகள் பால் பற்கள் இரண்டு வயதில் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்க தொடங்கும். கீழ்த்தாடையில் உள்ள ஒவ்வொரு ஜோடி நிரந்தர முன் வெட்டு பற்கள் புதிதாக தோன்றுவது ஒரு குறிப்பிட்ட வயதில் தான் நடைபெறும்.
  • இந்த பல் முளைக்கும் செயலானது, கிடேரிக்கு கிடேரி மாறுபடாது. ஆனால், ஒவ்வொரு ஜோடி புது நிரந்தர பற்களும் முளைப்பதில் சில மாதங்கள் வித்தியாசம் இருக்கலாம். ஆகவே, ஒரு மாட்டின் வயதை சில மாதங்கள் முன்பின் வித்தியாசத்தில் கூற முடியும். பொதுவாக, இந்த பற்களை கொண்டு கணிக்கும் போது 6 மாதங்கள் வரை முன்பின் ஆக வயது வித்தியாசம் மாறுபடலாம். நிரந்தர பற்கள் அளவில பெரியதாக நிலையான தன்மை உடையதாக செவ்வக வடிவில் மஞ்சளாக வைக்கோல் நிறத்தில் காணப்படும்.
  • தற்காலிக பால் பற்கள் விழும்போது ஜோடி ஜோடியாக ஆறு மாத இடைவெளியில் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும். மாடுகளில் நிரந்தர முன் வெட்டு பற்கள் 2,4,6,8 என்று இருந்தால் அவற்றின் வயது முறையே இரண்டு, இரண்டரை, மூன்று மற்றும் மூன்றரை வயதிற்கு மேல் என்று நிர்ணயிக்கலாம். மொத்த நிரந்தர பற்களும் முளைத்து விட்ட மாடுகளில் பற்களின் தேய்வை கொண்டு வயது ஓரளவு தீர்மானிக்கப்படுகிறது. ஆறு ஆண்டு வயதில் நடுவில் உள்ள முதல் ஜோடி நிரந்தர பற்கள் முன்பற்கள் தேய்ந்து மற்ற முன் வெட்டு பற்களை விட குறைவான உயரத்துடன் காணப்படும். மேலும், இடைவெளியுடன் காணப்படும்.
  • இது போன்று ஒவ்வொரு ஜோடியாக தேய்ந்து கொண்டு போகும் நிலையில் 10 வயது ஆகும் போது அனைத்து பற்களுமே தேய்ந்த நிலையில் காணப்படும். மாடுகளில் 12 ஆண்டு வயதானவற்றை வயதில் முதிர்ச்சி அடைந்தவை என்று பொதுவாக குறிப்பிடுகிறோம். மாடுகள் வயதாகி விட்டால் ஒரு சில பற்கள் அல்லது மொத்த பற்களும் உதிர்ந்து விடும்.
  • பொதுவாக, 3 வயதில் கொம்பின் அடிப்பாகத்தில் வட்டமாக கொம்பை சுற்றி ஒரு வளையம் தோன்றும். பின்னர் ஆண்டிற்கு ஒரு வளையம் வீதம் தோன்றும். கொம்புகளை சீவி விட்டால் வயதை கணக்கிடுவது கடினம். எனவே, மாடுகளின் வயதை பற்களை கொண்டு துல்லியமாக கணக்கிடலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Do you know how to identify cattle age by their teeth? Here are complete guidance for you

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.