1. கால்நடை

குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்ட ஏற்ற தொழில்: முயல் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்

KJ Staff
KJ Staff

கால்நடை வளர்ப்பு என்பது உபதொழிலாக பெரும் பலான விவசாகிகள் செய்து வருகிறார்கள். லாப நோக்கத்திற்காக அல்லாது தங்களின் தேவைக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் அதுவே பண்ணைகள் அமைத்து பெரிய அளவில் கால்நடை வளர்ப்பு என்று அமைத்து  கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக செய்து வருகின்றனர்.

குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்ட ஏற்ற  தொழில் என்றல் அது முயல் வளர்ப்பு எனலாம். பொதுவாக முயல்களை அதன் தோலுக்காகவும், இறைச்சிகாகவும் மற்றும் உரோமத்திற்காகவும் வளர்பார்கள். எளிய தீவனத்தை உண்டு சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு.

முயல் இன ரகங்கள்

முயல் இனங்களில் பல வகை உண்டு .அவை

 • அங்கோரா இனங்கள்
 • இமாலயன்
 • சோவியத் சின்சில்லா
 • டச்சு
 • ஆல்பினோ
 • நியூசிலாந்து வெள்ளை
 • நியூசிலாந்து சிவப்பு
 • கலிபோர்னியா வகை
 • வெள்ளை ஜெயின்ட்
 • சாம்பல் நிற ஜெயின்ட்
 • பிளமிஸ் ஜெயின்ட்

 ஆகிய முயல் இனங்கள் உள்ளன. இவற்றில் வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், சோவியத் சின்சிலா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய ரகங்கள் வளர்ப்புக்கு ஏற்றவை. இவை மூன்று மாதங்களில் 2 -  3 கிலோ அளவுக்கு வரை வளரக் கூடியவை.

கலப்பு இனங்கள்

மேலே குறிப்பிட்டுள்ள  எல்லா அயல்நாட்டு இனங்களுடன் உள்ளூர் இனங்களை கலப்பு செய்யப்பட்டு புதிய இனங்கள் உருவாக்க படுகின்றன.  இவ்வை எல்லா  தட்பவெப்ப நிலைக்கும் மிகவும் ஏற்றது. இதன் எடை 4-4.5 கிலோ வரை இருக்கும். இதன் உரோமங்களின் நிறம் ஒவ்வொரு முயலுக்கும் வேறுபடும்.

பண்ணை அமைக்க ஒரு யூனிட் முயல்  

பண்ணை தொடங்க நினைப்பவர்கள் ஒரு யூனிட் எனபடும் 10 முயல்களை வாங்க வேண்டும். ஒரு யூனிட்டில் சினை முயல் ஒன்று, பருவத்துக்கு வந்த இரண்டு பெட்டை முயல்கள் (4 மாதம் வயதுடையவை ), 6 மாத வயதுடைய ஒரு ஆண், ஒரு கிலோ அளவுடைய இரண்டு ஆண் முயல்கள், நான்கு பெட்டைக் குட்டிகள் என ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் என பத்து முயல்களைக் கொண்டது ஒரு யூனிட். முயல் வளர்ப்பில் இறங்குபவர்கள் இந்த முறையில் வாங்கும் போது, 3 மாதங்களில் அனைத்து நிலைகளையும் கடந்து விடலாம். ஒரு யூனிட் முயல்களை, ஒரு கூண்டுக்கு ஒரு முயல் எனத் தனித்தனியாக விட்டுவிட வேண்டும்.

கூண்டு மேலாண்மை

முயலுக்குகான வசிப்பிடத்தை அதிகச் செலவு இல்லாமல்  வீட்டைச் சுற்றி நிழலுள்ள இடங்களில் கூண்டுகளை அமைத்து முயல்களை வளர்க்கலாம். ஒரு முயலுக்கு என்று பார்க்கும் போது  நான்கு சதுரடி இடமே போதுமானது. அதாவது, இரண்டடிக்கு இரண்டடி என்ற அளவில் கூண்டு அமைக்க வேண்டும். தனித்தனியாக கூண்டு செய்யாமல், பத்தடி நீளம், நான்கடி அகலம் மற்றும் ஒன்றரை அடி உயரத்தில் ஒரு கூண்டு செய்து, அதை இரண்டு, இரண்டு அடியாகப் பிரித்துக்  கொண்டால் செலவு குறையும். இது வளரும் முயல்களுக்கான கூண்டு.

குட்டிகளை ஈனும் முயலுக்கான கூண்டு

குட்டிகளை  ஈனும் முயல்களுக்கு இரண்டரை  சதுரடி மற்றும் ஒன்றரை அடி உயரத்தில் கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 கேஜ் என்ற வகையான கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலிற்கு காலில் புண்கள்  உண்டாகாமல் பாதுகாப்பாக இருக்கும். அதேபோல தண்ணீருக்கு 'நிப்பில்’ அமைப்பை அமைத்து விட்டால் தண்ணீர் வீணாகாமல் சேமிக்கலாம்.

பண்ணை அமைத்தல் மற்றும் பராமரிக்கும் முறை 

 • முயல் பண்ணையானது சற்று உயரமான இடத்தில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் அமைக்க வேண்டும்.
 • முயல் கூண்டுகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 • கொட்டகையினை சுற்றி மரங்கள், புல் தரைகள் இருப்பது அவசியம்.
 • கொட்டகைக்கு வருடம் இரு முறை சுண்ணாம்பு பூசி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 • வாரம் இரு முறை கூண்டுகளுக்கு கீழே சுண்ணாம்புக் கரைசலை தெளிப்பது நல்லது.
 • கோடை வெப்பம் தாக்காமல் இருக்க கூண்டுகளின் மேலும் முயல்களின் மேலும் நீர் தெளித்து வெப்பத்தை குறைக்கலாம்.

முயல்களுக்கான தீவன மேலாண்மை

முயல்களுக்கான  தீவனம்  அதன் வயது மற்றும் உற்பத்தித் திறனைப் பொறுத்தே அமைகிறது.  சிறந்த வளர்ச்சியைப் பெற ஊட்டச்சத்துள்ள உணவளித்தல் அவசியம் ஆகும். பொதுவான ஒரே வகை உணவினையே,   அனைத்து முயல்களுக்கும் கொடுக்க வேண்டும். நமது நோக்கத்திற்கு ஏற்ப, இரண்டு வகையான உணவுகளை பரிந்துரைக்கிறார்கள் . அதன் படி  நல்ல இலாபம் ஈட்ட முயல்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு வகைத் தீவனமும், பால் உற்பத்தியை பெருக்க  ஒரு வகைத் தீவனமும் கொடுக்க வேண்டும். 

முயல்கள் எல்லாவிதமான பசுந்தீவன பயிர்கள், கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள், கிழங்குகளையும் விரும்பி தின்னும். அருகம்புல் போன்ற புல்வகை, பயறு வகை தீவனப்பயிர்களான வேலி மசால், முயல் மசால், குதிரை மசால், அகத்தி, காராமணி மேலும் பலா, முருங்கை, கல்யாண முருங்கை, முள் முருங்கை மல்பெரி இலைகள் மற்றும் காலிபிளவர் கழிவுகளையும் உண்ணும்.

நன்கு வளர்ச்சி அடைந்த முயலுக்கு தினமும் 300 முதல் 400 கிராம் வரை தழைத் தீவனமும், குட்டிகளுக்கு 50 முதல் 250 கிராம் வரையும் தழைத்தீவனம் கொடுக்கலாம்.முயல்களுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 10 மிலி அளவும் பாலூட்டும் முயலுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 90 மிலி அளவும் தூய தண்ணீர் வழங்கப்பட வேண்டும். முயல்கள் பொதுவாக பகல் வேளைகளில் தூங்கும் பழக்கம் கொண்டவை. அதனால், காலை வேளைகளில் மொத்தத் தீவனத்தில் கால் பங்கும் இரவு வேளைகளில் முக்கால் பங்கு என பிரித்துக் கொடுப்பது நல்லது. 

முயலைத் தாக்கும் நோய்களும், தடுக்கும் முறைகளும்:

 • முயல்களை பொதுவாக சுவாச நோய்கள், சாக்சிடியா கழிச்சல், குடல் அழற்சி, மலச்சிக்கல், காதை தாக்கும் சொறி, சிரங்கு ஆகியன அதிக அளவில் தாக்கும்.
 • பாக்டிரியாக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த டெட்ராசைக்கிளின் எனும் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வீதம் கலந்து, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதம் ஒரு முறை கொடுக்க வேண்டும்
 • நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை முயல்களுக்கு குறிப்பாக குட்டி போட்ட மற்றும் இளவயது முயல்களுக்கு கொடுக்க வேண்டும்.
 • முயல் கூண்டுகள், தீவன தொட்டிகள், தண்ணீர் பாத்திரங்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். தரமான தீவனங்களை முயலுக்கு அளிக்க வேண்டும்.

லாபத்திற்கா யுக்திகள்

பெரும்பாலானோர் லாப நோக்கதிர்க்கவே முயல் பண்ணைகளை அமைக்கிறார்கள்.சரியான முறையில் கையாண்டால் பணம் கொழிக்கும் தொழிலாகும்.அதாவது 10 பெண் முயல்களோடு 2 ஆண் முயல்களை வைத்து பண்ணை ஆரம்பித்தால், ஒரு வருடத்தில் 250-ல் இருந்து 300 முயல்கள் வரையில் கிடைக்கும். வளர்ச்சியடைந்த பெண் முயல் ஆண்டுக்கு 5 முதல் 8 முறை குட்டிகளை ஈணும். சராசரியாக ஒரு முறை 6 குட்டிகளை பிரசவிக்கும்.இந்த குட்டிகளை 100 நாட்களில் இருந்து 135 நாட்களுக்குள் ஒரு முயலில் 1.5 கிலோ முதல் 2 கிலோ வரை இறைச்சி கிடைக்கும்.சரியாக திட்டமிட்டால் கணிசமாக வருவாய் ஈட்டிட முடியும்.

பொதுவான ஆலோசனைகள்

 • பிறந்தவுடன் முயல் குட்டி களுக்கு குளிர் மற்றும் குளிர் காற்றிலிருந்து பாதுகாப்பு அளிக் கவேண்டும்.
 • கூடுமான வரை பசுந்தீவனம், கழிக்கப்பட்ட காய்கறிகளையே உணவாகத் தர வேண்டும். கழிக்கப்பட்ட காய் கறிகளை வேகவைத்து கொடுப்பது மிகவும் அவசியம்.
 • குட்டிகளின் இறப்பை தவிர்ப்பதோடு, வளரும் முயல் களின் எடையும் பெருமளவு அதிகரித்து விடாமல் கவனித்துக்கொள்ளவேண்டும்.
 • நவீன முறைகளில் நடத்தப்படும் பண்ணைகளில் முயல்களுக்கு அடர்தீவனம் வழங்கப்படுகிறது.
 • வளர்ந்த முயல்களுக்கு தினசரி 120 கிராம் அடர் தீவனம் தேவைப் படுகிறது. அதனை குச்சித் தீவனமாகவோ, மாவு தீவனமாகவோ அளிக்கலாம்.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: How Rabbit Farming Would Be Profitable? Here Are Some Strategies And Techniques For Farming Beginners

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.