1. கால்நடை

கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு திட்டம் தொடக்கம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தமிழகம் முழுவதிலும், கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள கால்நடைகள் மானியத்துடன் கூடிய காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்போர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்று கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.

கால்நடைகள் காப்பீடு

கோவை மாட்டத்தில் நடப்பு ஆண்டு 3100 ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் மானியத்துடன் கூடிய காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட உள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள சுமார் 2300 கால்நடைகளும்,  திருப்பூர் மாவட்டத்தில் 3800 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தத்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

காப்பீடு மானிய விதிமுறைகள்

*வறுமை கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்போர்க்கு 70% மானியமும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்போர்க்கு 50% மானியமும் வழங்கப்படும்.

*இரண்டரை வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம்.

*ஒன்று முதல் மூன்று வயதுடைய வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்யலாம்.

*அதிகபட்சமாக ரூ.35,000 மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

*ஓராண்டு காப்பீடு கட்டனமாக கால்நடையின் மதிப்பில் 2% நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 *ரூபாய் 35 ஆயிரத்துக்கும் மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான  மதிப்புக்கான காப்பீடு கத்தணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும்

*ஒரு குடும்பத்திற்கு அதிக பட்சமாக 5 கால்நடைகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அனுகி தெரிந்துகொள்ளுங்கள்.

English Summary: Insurance with subsidy Scheme started all over Tamil Nadu for livestock : 70% subsidy for people below the poverty line

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.