Krishi Jagran Tamil
Menu Close Menu

ஒருங்கிணைந்த கோழி உடனான மீன் வளர்ப்பு

Tuesday, 09 October 2018 05:11 PM

ஒருங்கிணைந்த பண்ணையம்

விவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே வருகிறது. எனவே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு முற்றிலும் ஒரு புதிய அணுகு முறை தேவைப்படுகிறது. இப்புதிய அணுகுமுறையே ஒருங்கிணைந்த பண்ணையமாகும்.

பயிர் சாகுபடியை மட்டும் நம்பி இருக்காமல் கறவை மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகிய உபதொழில்களை இணைத்து விவசாயத்தில் ஈடுபட்டால் கூடுதல் வருமானம் பெறலாம்.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம்

ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணைத் திட்டம் வகுக்கும்போது நன்செய், தோட்டக்கால், புன்செய் நிலங்களுக்கு ஏற்ற பயிர்த் திட்டத்தை அமைத்தல் வேண்டும். பின்பு அந்தப் பயிர்த் திட்டத்துக்கு ஏற்ப பொருளாதார ரீதியில் பலன் தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் உபதொழில்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும்.

அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட உபதொழில்களுக்குத் தேவையான இடுபொருள்கள் அந்தப் பண்ணையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். உபதொழிலுக்கு ஏற்ற இடுபொருள்கள் போதவில்லையெனில் அதற்கேற்றவாறு பயிர்த் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.

மேலும் ஒரு உபதொழிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மற்றொரு உபதொழிலுக்கு இடுபொருளாக இருக்குமாறு உபதொழில்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். பண்ணையில் விளையும் அல்லது தங்கள் ஊரில் கிடைக்கும் தானியங்களைக் கொண்டே தீவனக் கலவை தயார் செய்தல் வேண்டும். அப்போது தான் உபதொழில்களுக்கு ஆகும் உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் பெறலாம்.

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் பயிர் சுழற்சியால் முதல் போகத்தில் நெல் பயிரிட்டு, இரண்டாம் போகத்தில் பயிறு, மூன்றாம் போகத்தில் பயிறு சாகுபடிக்கு மாற்றாக மக்காச்சோளம் ஆகியவற்றைப் பயிரிடலாம்.

கோழி வளர்ப்பு

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மீன் வளர்ப்பு ஒரு அங்கமாக இருப்பதால் 10 சென்ட் மீன் குட்டைக்கும், மீதமுள்ள 90 சென்ட் பயிர் சாகுபடிக்கு ஒதுக்கலாம். இதில் இரண்டு போக நெல்லில் கிடைத்த பதர் நெல் தவிடு ஆக்கப்பட்டு கோழிக்குத் தீவனமாக பயன்படுத்தப்படலாம். இதே போல் மூன்றாம் போகத்தில் சேர்க்கப்பட்ட மாற்றுப் பயிரில் ஒன்றான மக்காச்சோளத்தையும் கோழித் தீவனத்துக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பயிர் சாகுபடியில் கிடைத்த சில விளைபொருள்கள், கழிவு உபயோகத்தால் கோழித் தீவனச் செலவை சுமார் 70 சதவீதம் குறைக்க முடியும்.

 மீன் குட்டையில் கோழி வளர்ப்பு

 1. கோழியின் கழிவு மீன்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். கோழியின் கழிவுகளில் 22 சதவீதம் புரதச் சத்தும், பாஸ்பரஸ், கந்தகம், தாமிரம், மாங்கனீசு போன்ற உலோகச் சத்துக்களும் 15 வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால் இது மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. மீன்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி கோழிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். 400 கலப்பின மீன் குஞ்சுகளுக்கு 20 கோழிகள் போதுமானவையாகும்.
 2. கோழிகளை 8-ஆவது வாரத்தில் விற்பனை செய்யலாம். மீன்கள் போதிய அளவிற்கு வளர்ச்சிப் பெற்று 6-வது மாதக் கடைசியில் விற்பனைக்குத் தயாராகும்.

இவ்வாறு ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் குறைந்த செலவில் அதிக வருமானம் பெறலாம்

Integrated farming system
English Summary: Integrated Farming - Fish cum Poultry

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

 1. Locust: வெட்டுக்கிளிகள் வந்தால் தடுப்பது எப்படி? கோவையில் அதிகாரிகள் ஆலோசனை!
 2. 50 % மானியத்தில் சூரிய ஒளி மின் வேலி திட்டம்! விவசாயிகளுக்கு அழைப்பு!
 3. தமிழகத்தில் பருப்பு சாகுபடியை அதிகரிக்க வேளான் துறை திட்டம்!
 4. பாம்பாறு பாசன விவசாயிகளுக்கு முழு மானியத்தில் விவசாய இடுபொருள்கள் - வேளாண் துறை!
 5. மண் வளம் காக்க விவசாயிகள் இவ்வகை மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வலியுறுத்தல்!
 6. Elephant death: சாப்பிட்ட பழத்தில் பட்டாசு - கர்ப்பிணி யானை பலியான பரிதாபம்!
 7. கேரளாவைப் போல் தமிழகத்திலும் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிப்பு - பலா விவசாயிகள் காத்திருப்பு!
 8. வாழையில் சருகு அழுகல் நோய்: தோட்டக்கலைத்துறை ஆய்வு!
 9. விவசாய கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகள்!
 10. Minmathi App: அரசின் நல திட்டங்கள் குறித்து அறிய "மின்மதி" என்ற புதிய செயலி அறிமுகம்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.