1. கால்நடை

கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி-MYRADA வேளாண் நிலையம் ஏற்பாடு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Training on Animal Husbandry and Management-
Credit : Dailythanthi

கால்நடை வளர்ப்பை எப்படி லாபகரமாக மாற்றிக்கொள்வது என்பது குறித்த இலவசப் பயிற்சி, MYRADA வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் ஈரோட்டில் நடைபெற உள்ளது.

வருமானத்தை இரட்டிப்பாக்குதல் (Doubling income)

தேசிய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் நிதி உதவியுடன், இந்த 3 நாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் பண்ணை வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்து விரிவாக விளக்கப்படும். எனவே பண்ணை விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு பலன்பெறலாம்.

பயிற்சியின் சிறப்பு அம்சங்கள் (Special features of the training)

இந்தப் பயிற்சி முகாமில், கறவை மாடுகள், வெள்ளாடு, செம்மறியாடுகள் மற்றும் கோழிகளின் இனங்களை எவ்வாறுத் தேர்வு செய்தல், வளர்க்கும் முறைகள், தீவனம் மற்றும் நோய் மேலாண்மை பற்றி எடுத்துரைக்கப்படும்.

மேலும் மரபு சார்ந்த மூலிகை மருத்துவ முறையில் கால்நடைகளில் நோய் மேலாண்மை மற்றும் குறைந்த செலவில் அடர்தீவனம் தயாரிப்பு முறைகள் போன்ற பலவிதத் தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியின் இறுதியில் பயிற்சிக்கான சான்றிதழும் வழங்கப்படும்.

இடம் (Place)

பயிற்சி வளாகம், வேளாண் அறிவியல் நிலையம், கோபி

தேதி(Date)

09.11.21 முதல் 11.11.21 வரை

நேரம் (Time)

காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை

மொத்தப் பயனாளிகள்

40 பேர் மட்டும்

குறிப்பு

  • பயிற்சி முழுவதும் இலவசம்

  • பயிற்சியின்போது தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.

  • 3 நாட்களும் பயிற்சியில் கலந்துகொண்டால் மட்டுமே பயிற்சிக்கான சான்றிதழ் அளிக்கப்படும்.

தொடர்புக்கு (For Contact)

திரு. சு. ஸ்ரீதர் ராஜ் குமார், பயிற்சி ஒருங்கிணைப்பாளர். கைப்பேசி எண் - 8344396930

முனைவர் கோ. திருமலைச்சாமி, விஞ்ஞானி (கால்நடை மருத்துவம்) கைப்பேசி - 9698528610

மேலும் படிக்க...

தக்காளியின் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

English Summary: Training on Animal Husbandry and Management- Published on: 27 October 2021, 06:56 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.