1. Blogs

தோட்டக்கலை தொழில் மேம்பாட்டு மையம் சார்பில், பசுமை குடில் கருத்தரங்கம்

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Green house workshop organized by EDII

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியில், வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி (சனிக்கிழமை) பசுமைக்குடில் விவசாய குறித்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது. ஆா்வமுள்ள விவசாயிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி முதல்வா் த.ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரியகுளம், தோட்டக்கலைக்கல்லூரி தொழில்மேம்பாட்டு மையம் சாா்பில்,  பல்வேறு தொழில் முனைவோர் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி பசுமை குடில் விவசாய கருத்தரங்கம் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி நடைபெற இருக்கிறது.

பயிற்சி முகாமின் முக்கிய அம்சமாக, பசுமை குடில் விவசாயம் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள், உற்பத்தி திறனை மேம்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்கள் என பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

பசுமை குடில் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் பசுமை குடில் அமைக்க விரும்பும் விவசாயிகள் என அனைவரும் கலந்துக் கொள்ளலாம். காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் முன்பதிவு செய்வது அவசியம். பதிவுக்கட்டணமாக ரூ 500/- மட்டும் செலுத்தி கலந்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94876 31465, 93619 21828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

English Summary: Edii Periyakulam Horti Business Incubation Forum offering Workshops and Seminars Published on: 26 February 2020, 04:59 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.