1. Blogs

காந்தி கிராம வேளாண் அறிவியல் மையம் உருவாக்கிய புதிய ரக ஒட்டுக்கத்தரி

KJ Staff
KJ Staff
New Variety of egg plant

தமிழகத்தில் கத்தரிக்காய் சாகுபடியில் திண்டுக்கல் மாவட்டம்  முன்னணியில் இருந்து வருகிறது. எனினும்  நூற்புழுக்கள், வேர் அழுகல் போன்ற காரணங்களால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே காந்தி கிராம வேளாண் அறிவியல் மையம் உருவாக்கிய புதிய ரக ஒட்டுக்கத்தரி நடவு செய்து 5, 6 மாதங்களில் நல்ல பலன் தரும்.  கத்தரியில் தோன்றும் நுாற்புழுக்கள் மற்றும் வேர் அழுகல் போன்றவற்றை  தடுத்து அதிக மகசூல் தருகிறது. நடவு செய்து ஆறாவது மாதம் முதல் செடியை கவாத்து செய்து உரம் மற்றும் நீர் நிர்வாக முறையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். மேலும் மறுதாம்பு பயிராக பராமரித்து தொடர்ந்து அறுவடை செய்யலாம். அதனால் நிலம் தயாரிக்கும் செலவு குறைவதோடு, அதிக மகசூல் மற்றும் லாபம் கிடைக்கும். இந்த வகை ஒட்டுக்கத்தரி வேளாண் அறிவியல் மையத்தில் பயிரிடப்பட்டு, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என வேளாண் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
நன்றி: அக்ரி டாக்டர்

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Gandhigram Rural University has developed new variety of Eggplant for Farmers Published on: 13 November 2019, 03:49 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.