1. Blogs

தனிநபர் சேமிப்பை மையப்படுத்தும் எல்ஐசியின் "பீமா ஜோதி" பாலிசி அறிமுகம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா பீமா ஜோதி (LIC’s BIMA JYOTI) என்ற ஆயுள் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பாதுகாப்பு மற்றும் சேமிப்புடன் இணைந்த தனிநபர் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.1000 முதலீடுக்கு ஆண்டுதோறும் ரூ.50 கூடுதல் பலனாக உத்திரவாதமாக வழங்கப்படுகிறது.

மக்களின் நம்பிக்கையை பெற்ற எல் ஐ சி காப்பீடு நிறுவனம், பீமா ஜோதி என்ற புதிய பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் பங்கு சந்தையுடன் இணையாது தனிநபர் சேமிப்பை மையப்படுத்தும் திட்டமாகும்.

பாலிசியில் இணைவது எப்படி?

இந்த பாலிசிகளை முகவர்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலம் ஆப்லைனிலும், www.licindia.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனிலும் வாங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் பாலிசியின் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், பாலிசி தொகையில் ஆயிரம் ரூபாய்க்கு 50 கூடுதல் தொகை வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

பாலிசி நிபந்தனைகள்

இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக 1,00,000மும், அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை.
இந்த பாலிசியை பொருத்தமட்டில், பாலிசியில் காலத்தில் 5 ஆண்டுகளை கழித்து விட்டு, விரும்பிய தொகையை உறுதி பணமாக அடைய மாதம் எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும்.
பாலிசி முதிர்வு காலத்திற்கு 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான கால கட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

  • இந்த பாலிசியில் சேர குறைந்தபட்ச வயதாக 90 நாட்கள் முடிவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 60 வயது வரை சேரலாம்.

  • இதற்கான பிரீமியம் தொகையை ஒவ்வொரு மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்தலாம்.

  • தற்போதைய சூழலில், வட்டி விகிதம் வேகமாக சரிந்து வரும் நிலையில், இத்திட்டத்தில் உத்தரவாத கூடுதல் தொகை அளிப்பது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.

ஆயுள் காப்பீடுடன் இணைந்த பாலிசி

பீமா ஜோதி திட்டத்தில் பாலிசிதாரர் இறக்க நேரிட்டால், இன்சூரன்ஸ் தொகையுடன், சேர்ந்துள்ள உத்திரவாத தொகையும் சேர்த்து வாரிசுகளுக்கு வழங்கப்படும். பாலிசி காலம் முடிந்து, பாலிசிதாரருக்கு இந்த தொகை வழங்கப்படும்.

மேலும் படிக்க...

ஒரே ப்ரீமியத்தில் ஓஹோன்னு வாழ்க்கை : எல்.ஐ.சி-யின் ஜீவன் அக்‌ஷய் திட்டம்!

LIC Policy : வாழ்வை வளமாக்கும் எல்.ஐ.சி., பாலிசிகள்! 2021ல் தவறவிட வேண்டாம்!!

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைபடத் தேவையில்ல! எல்.ஐ.சி-யிடம் ஒப்படைத்துவிட்டால் போதும்!

English Summary: LIC launches New scheme LIC BIMA JYOTI' policy focusing on personal savings Published on: 03 March 2021, 11:10 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.