Krishi Jagran Tamil
Menu Close Menu

அடுத்த மாதம் முதல் தடைபட்ட கோமாரி தடுப்பூசி முகாம் நடக்க ஏற்பாடு

Tuesday, 26 May 2020 12:07 PM , by: Anitha Jegadeesan
Vaccination Camp for Livestock

தேசிய விலங்குகள் நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில், இரு கட்டங்களாக கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் 1.4 கோடிக்கு மேல் கால்நடைகள் உள்ளன. இந்தாண்டிற்கான தடுப்பூசி முகாம் பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை அறிவித்திருந்தது. கொரோன நோய் பரவல், ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி போன்ற காரணங்களினால் மார்ச் மாதத்திற்கான கோமாரி தடுப்பூசி முகாம் முழுமையாக நடைபெறவில்லை. எனவே இதுவரை கோமாரி தடுப்பூசி போடப்படாத கால்நடைகளுக்கு, வரும் ஜூன் மாதம் முதல் போடப்படும் என கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய்

பொதுவாக கால்நடைகளை தாக்கும் மிக முக்கியமான நோய்களில் கோமாரி நோயும் ஒன்றாகும். வைரஸ் கிருமிகளால் உண்டாகும் இந்நோயானது கால் மற்றும் வாய் காணை போன்றவற்றை தாக்கும். இதனால் வாயிலும், நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படுவதுடன், எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டே இருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். இதனால் பால் குறைதல், சினை பிடிப்பதில் சிரமம், கருச்சிதைவு போன்றவை ஏற்படும். இதனால் கறவையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும்.  எனவே அரசு  கால்நடைகளுக்கு கட்டாயம் கோமாரி தடுப்பூசி  போடும்படி  பரிந்துரைத்துள்ளது.

கால்நடைகளை பாதுகாக்கவும், விவசாயிகள்  நஷ்டம் அடையாமல் இருக்கவும்  இந்த சிறப்பு முகாமை பண்ணையாளர்கள், கால்நடை விவசாயிகள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  கால்நடை பராமரிப்புத்துறை கேட்டுக் கொண்டது.  இது குறித்து கால்நடை துறை அதிகாரிகள் கூறுகையில்,  இம்மாத இறுதியில் நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவடைவதை அடுத்து தடுப்பூசி போடப்படாத, மீதமுள்ள கால்நடைகளுக்கு, கோமாரி தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார்.

https://tamil.krishijagran.com/animal-husbandry/vaccination-schedule-for-cattle-know-the-annual-basis-vaccines-to-keep-your-herd-healthy/

Vaccination for Cattle Major diseases affecting dairy cattle Foot and Mouth Disease Prevent foot and mouth disease in cattle Vaccination of Foot and Mouth Disease Animal Welfare Department
English Summary: Vaccination Camp For Cattle Announced By Tamilnadu Animal Welfare Department

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. விடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்!
  2. செயல்படத் தொடங்கியது பள்ளிகள்! - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை!
  3. எந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..! - விவசாயிகள் திட்டவட்டம்!
  4. விவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது!!
  5. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!
  6. பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு!
  7. LIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு!
  8. தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு!
  9. பொது மக்களுக்கு இனிப்பான செய்தி! 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி!
  10. PKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு! முழு விபரம் உள்ளே!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.