1. Blogs

விவசாய அதிகாரி ஆக ஆசையா? வந்துவிட்டது உங்களுக்கான வேலை அறிவிப்பு:

KJ Staff
KJ Staff
Agricultural Officer
Credit : Agriculture

விவசாயிகளுக்கு உதவும் எண்ணம் படைத்தவரா நீங்கள்? உங்களுக்காகவே வந்துள்ளது தமிழக அரசின் விவசாய அதிகாரிகளுக்கான வேலை அறிவிப்பு. தமிழக அரசில் விவசாய அதிகாரி (Agriculture Officer) பிரிவில் 365 இடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி., (TNPSC) சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விவசாயத் துறையில் பட்டம் (Degree) பெற்றவர்கள், தமிழக அரசின் இந்தப் பொன்னான வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வயது:

வயது: 1.7.2021 அடிப்படையில் பொது பிரிவினர் பி.எஸ்சி., விவசாயம் (B.Sc. Agriculture) முடித்தவர்களுக்கு 30, எம்.எஸ்சி., விவசாயம் (M.Sc. Agriculture) முடித்தவர்களுக்கு 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

கல்வித்தகுதி:

பி.எஸ்சி., (விவசாயம்) முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

இரண்டு எழுத்து தேர்வுகள் (Wrtten exam) மற்றும் ஒரு நேர்முகத்தேர்வு (Face to Face Interview) என் மொத்தம் 3 தேர்வுகள் இருக்கும். தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு வேலை நிர்ணயம் செய்யப்படும்.

தேர்வு மையம்:

எழுத்துத் தேர்வுகள் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை. நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (Online) மூலமாக விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்:

பதிவுக்கட்டணம்: ரூ. 150. தேர்வுக்கட்டணம்: ரூ. 200

விண்ணப்பிக்க கடைசி நாள்:
4.3.2021

மேலும் விபரங்களுக்கு TNPSC வெளியிட்டுள்ள தகவல்களை கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.
https://tnpsc.gov.in/Document/english/04_2021_AO_EXTN_Eng.pdf

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் தொழில் தொடங்க தமிழக அரசு கடனுதவி! பயனாளர்களுக்கு அழைப்பு!

ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வந்துவிட்டது பறக்கும் விமான கருவி

திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்! கரூர் பெட்ரோல் பங்கின் சூப்பர் அறிவிப்பு!

English Summary: Want to become an agricultural officer? Job announcement for you: Published on: 12 February 2021, 07:55 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.