1. Blogs

ஜப்பானில் அதிசய இளைஞர்: 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறார்!

R. Balakrishnan
R. Balakrishnan
only sleeps 30 minutes

கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே துாங்கும் இளைஞர் ஜப்பானில் வசிக்கிறார். கிழக்காசிய நாடான ஜப்பானைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி, 36. இவர் 'ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோஸியேஷன்' தலைவராக பதவி வகிக்கிறார். கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் துாங்குகிறார்.

குறைந்த நேரத் தூக்கம்

இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ஹோரி கூறுகிறார். துாங்கும் நேரத்தை குறைப்பது குறித்து நுாற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்தும் வருகிறார். இதுகுறித்து தைசுகே ஹோரி கூறியதாவது: எல்லோரையும் போல நானும் எட்டு மணி நேரம் தான் துாங்கிக் கொண்டு இருந்தேன்.

ஆனால் பல வேலைகள் பாதித்தன. எனவே துாங்கும் நேரத்தை குறைக்க துவங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே துாங்குகிறேன்.சில நாட்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட துாங்குகிறேன். இதனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை என்று அந்த இளைஞர் கூறினார்.

மேலும் படிக்க

63 வயதில் நீட் தேர்வு எழுதிய முன்னாள் தலைமை ஆசிரியர்!

BYJU'S நிறுவனத்தின் அசத்தல் திட்டம்: குழந்தைகளுக்கு இலவச கல்வி!

English Summary: Wonderful young man in Japan: only sleeps 30 minutes! Published on: 19 September 2021, 08:02 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.