1. விவசாய தகவல்கள்

PM கிசான் திட்டத்தின் 2000 ரூபாய் தவணை வரவில்லையா? என்ன செய்வது?

T. Vigneshwaran
T. Vigneshwaran
PM Kisan Samman Nidhi

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 9 வது தவணையின் பணத்தை இதுவரை பெறாத விவசாயிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இந்த எண்களில் புகார் செய்யலாம்.

பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் ஒன்பதாவது தவணை நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளுக்கு நேற்று அதாவது ஆகஸ்ட் 9 திங்கட்கிழமை அனுப்பப்பட்டது, ஆனால் இன்னும் பல விவசாயிகள் தவணை பணத்தை பெறவில்லை. இந்த விஷயத்தில், நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை.விவசாய சகோதரர்கள் அரசு வழங்கும் உதவி எண்ணில் புகார் செய்யலாம். இது தவிர, நீங்கள் அப்பகுதியின் கணக்காளர் மற்றும் விவசாய அதிகாரியையும் தொடர்பு கொள்ளலாம்.

தவணை பணம் சிக்கிக் கொள்ளும் காரணம்

சில நேரங்களில் அரசாங்கத்திலிருந்து கணக்கிற்கு பணம் மாற்றப்படுகிறது, ஆனால் அது விவசாயிகளின் கணக்கை சென்றடைவதில்லை. இதற்கு முக்கிய காரணம் உங்கள் ஆதார், கணக்கு எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றில் தவறு இருக்கலாம்.

 

2000 ரூபாய் பெற இங்கே புகார் செய்யலாம்

முதலில், நீங்கள் உங்கள் பகுதியின் கணக்காளர் மற்றும் வேளாண் அதிகாரியைத் தொடர்புகொண்டு அதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த நபர்கள் உங்கள் பிரச்சனையைக் கேட்கவில்லை என்றால், அது தொடர்பான உதவி மையத்தையும் நீங்கள் அழைக்கலாம்.

இந்த எண்களை நீங்கள் தோடர்புகொள்ளலாம்

கிசான் சம்மன் நிதியின் தவணை வரவில்லை என்றால், பிஎம் கிசான் சம்மனின் உதவி எண்ணில் புகார் அளிக்கலாம். இதற்காக நீங்கள் 011 24300606 /011 23381092 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம். இது தவிர, திங்கள் முதல் வெள்ளி வரை, PM Kisan உதவி மையத்தை (PM KISAN HELP CENTRE ) pmkisan ict@gov.in இல் தொடர்பு கொள்ளலாம்.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ .6000 நிதி உதவி அளிக்கிறது. இந்த தொகை நேரடியாக கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த 6000 ரூபாய் 2000-2000 என்று மூன்று தவணைகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி பணம் பெறவில்லை என்றால், மத்திய விவசாய அமைச்சகத்தின் இந்த உதவி மையத்தை அழைப்பதன் மூலம் நீங்கள் அதைப் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

மேலும் படிக்க:

PMKMY-விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியத் திட்டம் - உங்கள் பெயரைப் பதிவு செய்வது எப்படி?

PMJDY: பல்வேறு நன்மைகளுடன் ரூ. 2 லட்சம் காப்பீடு தரும் ஜன் தன் கணக்கு திட்டம்!!

 

English Summary: 2000 installment of PM Kisan scheme not received? what to do?

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.