1. விவசாய தகவல்கள்

பல்வேறு அம்சங்கள் கொண்ட RuPay Card : இப்போது விவசாயிகளுக்கும்- விவரம் உள்ளே!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கிரெடிட் கார்டுகளில் இப்போது ரூபே (RuPay) கார்டு வழங்கப்படுகிறது. பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த கார்டுகளை விசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகையில் எந்தவித சர்வீஸ் சார்ஜ்களும் வசூலிக்கப்படுவதில்லை.

கிசான் கிரெடிட் கார்டு எனும் கடன் அட்டை தகுதியுள்ள விவசாயிகளுக்கு அவசர தேவைக்காகக் கடன் பெறவும், வேளாண் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் குறைந்த வட்டியில் விவசாயம் சார்ந்த தேவைகளுக்கு கடன் பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் ரூபாய் 1.60 லட்சம் வரையிலான கடன் பெற எந்தவித அடமானமும் தேவையில்லை. KCC- மூலம் விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடனை குறைந்த வட்டியில் பெற முடியும். முறையாக தவணை செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

RuPay Card - ரூபே கார்டு

அண்மைக் காலமாக இந்த வகையான கிசான் கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய அரசின் ரூபே கார்டு RuPay card வழங்கப்படுகிறது. இதனை, அனைத்து ஏடிஎம் மையங்களிலும், POS மெஷினிலும், மற்றும் அனைத்து வகை இ-காமர்ஸ் தளங்களிலும் பயன்படுத்தலாம்.
வங்கியாளர்கள் இந்த ரூபே கார்டை (RuPay card) விவசாயிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் விநியோகிக்க ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ரூபே கிசான் கிரெடிட் கார்டை வைத்திருப்பதன் நன்மைகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்

ரூபே கிசான் கிரெடிட் கார்டு (RuPay - KCC) நன்மைகள்

  • சிங்கிள் மெசேஜ் மற்றும் டூயல் மெசேஜ் சிஸ்டத்தையும் இந்த ரூபே கார்டு கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • வெளிநாடு நிறுவனத்தைச் சார்ந்த விசா & மாஸ்டர் கார்டு நெட்வொர்க்குகள் போலல்லாமல் இந்த ரூபே கார்டுகளுக்கு எந்த நுழைவுக் கட்டணமும் கிடையாது.

  • ரூபே கடன் அட்டை முழுமையான வெப் அடிப்படையிலான கட்டமைப்பை வழங்குகிறது. முழுமையான பாதுகாப்பிற்கும் உறுதியளிக்கிறது.

  • மற்ற சர்வதேச கிரெடிட் கார்டுகளுடன் ஒப்படும் போது நிர்வாக செலவுகள் மற்றும் காலாண்டு கட்டணங்கள் வசூலிப்பு மிகக்குறைவு. எஸ் எம் எஸ் ( SMS) இயங்குதளத்திலும் உதவிக் குறிப்பு மற்றும் கூடுதல் கட்டணம் போன்ற மேம்பட்ட அம்சங்களை கையாளும் வகையில் திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • பணம் எடுத்தல் தொடர்பான அனைத்து ஏடிஎம் மையங்களிலும், POS மெஷினிலும், மற்றும் அனைத்து வகை இ-காமர்ஸ் தளங்களிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம், நாம் வங்கிக்கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?

ரூபே கார்டு வழங்கும் வங்கிகள்

பி.என்.பி (PNB), இந்தியன் வங்கி (IB), யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா (UBI), ஃபெடரல் வங்கி போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி வங்கிகளும் ரூபே கிசான் கிரெடிட் கார்டை வழங்குகின்றன.

ரூபே கிசான் கிரெடிட் கார்டு பெற யார் தகுதியுடையவர்கள்?

  • கிசான் கிரெடிட் கார்டுக்கு தகுதியான விவசாயிகள் அனைவரும் ரூபே கிசான் கிரெடிட் கார்டுக்கு தகுதியுடையவர்கள் தான்.

  • விண்ணப்பதாரர் விவசாயத்துடன் தொடர்புடையவராக இருக்க வேண்டும்.

  • 18 வயது முதல் 75வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

  • 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் துணை விண்ணப்பதாரர் கட்டாயம் அவசியம்.

  • மற்றவரின் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாய நபர் கூட இந்த கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

ரூபே கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ரூபே கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, உங்கள் அருகிலுள்ள வங்கி கிளையைப் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் செயல்முறை குறித்து கேளுங்கள். திட்டம் குறித்த விவரங்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் பார்வையிடலாம்.

மேலும் படிக்க...

தமிழக அரசின் "உழவர் - அலுவலர் தொடர்புத் திட்டம்" - சிறப்பு அம்சங்கள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!!

PM Kisan FPO Yojana : விவசாய குழுக்களுக்கு 15 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா உங்களுக்கு?

 

English Summary: All you know about RuPay Kisan Credit card; Eligibility and applying method all details here Published on: 21 November 2020, 05:07 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.