1. விவசாய தகவல்கள்

நேரடி நெல் விதைப்பு: தண்ணீரை சிக்கனப்படுத்தி, செலவையும் குறைக்கலாம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Direct Paddy Planting
Credit : Dinamani

நேரடி நெல் விதைப்பின் (Direct Paddy planting) மூலம் நடவு செய்வது தவிர்க்கப்படுவதால் கூலியாட்கள் தேவை குறைவதோடு நாற்றாங்கால் உற்பத்தி செலவும் குறைக்கப்படுகிறது. இதற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவும் குறைவு தான்.

களைகளை அழிக்க

நேரடி நெல் விதைப்பில் களைகளும், நெல் விதையும் ஒரே நேரத்தில் வளர்வதால் களைகொல்லிகளை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. விதைப்பதற்கு முன் வயலை நன்கு உழுது லேசாக நீர் பாய்ச்ச வேண்டும். அடுத்து மேற்பரப்பில் களைகள் முளைக்கும் போது மேலோட்டமாக உழவேண்டும். அல்லது ஒரு எக்டருக்கு ஒரு கிலோ கிளைபோசேட் களைகொல்லியை 500 லிட்டர் தண்ணீருடன் தெளித்தால் களைகளை அழிக்கலாம். நெல் மற்றும் பசுந்தாள் உரத்தை (Green Fertilizer) ஒருங்கே விதைக்க வேண்டும். 30ம் நாளில் 2, 4 டி எஸ்டர் என்ற களைகொல்லியை 1250 மில்லி எடுத்து 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்தால் பசுந்தாள் உரங்கள் மடிந்து மண்ணிற்கு வளம் தருகிறது. களைகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.

விதைப்பதற்கு 5-7 நாட்களுக்கு முன் ஒரு கிலோ கிளைபோசெட் களைகொல்லியை எக்டேருக்கு 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். கோரை அதிகம் இருப்பின் 2,4 சோடியம் உப்பு 250 கிராம், ஒரு கிலோ கிளைபோசேட்டுடன் கலந்து தெளித்து களைகளை அழிக்கலாம்.

செலவு குறைவு

களை எடுக்கும் கருவியை பயன்படுத்தினால் கைகளால் எடுக்கும் செலவு குறையும். மண்ணில் களைகளை அழிக்க காற்றோட்ட வசதி ஏற்படும். அதிக துார்களும் கதிர்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. விதைத்த 10ம் நாளும் அடுத்து 10 அல்லது 15 நாட்களுக்கு ஒன்று அல்லது இரு முறை களைகளை அகற்றி இயற்கை உரமாக மாற்றலாம். விதைத்த 30 - 35 நாட்களுக்குள் களை எடுப்பது நல்லது.

மேலும் தகவலுக்கு

வேங்கடலெட்சுமி
உதவி பேராசிரியர்
உழவியல் துறை
வேலாயுதம், டீன் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
ஈச்சங்கோட்டை
தஞ்சாவூர், 95003 50623

மேலும் படிக்க

மேட்டூர் கால்வாயில் 13 ஆண்டுகளுக்கு பின் பாசனத்திற்கு நீர் திறப்பு

ரோஜா சாகுபடிக்கு பூச்சிக்கொல்லி, உர விலையை குறைக்க விவசாயிகள் கோரிக்கை

English Summary: Direct paddy planting: Save water and reduce cost! Published on: 03 August 2021, 10:26 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.