1. விவசாய தகவல்கள்

50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit : One India Tamil

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதிகளில் 50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகிக்கப்படுவதால், விவசாயிகள் பெற்றுப் பயனடையுமாறு வேளாண்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண்மை உதவி இயக்குனா் ஆா்.பொன்ராஜ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதைகள் சங்கரன்கோவில், வீரசிகாமணி, கரிவலம்வந்தநல்லூா் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகிக்கப்படுகிறது.

  • டிகேஎம்13, என்எல்ஆா், ஏடிடி45, ஏஎஸ்டி16, டிபிஎஸ்5 போன்ற சான்றுபெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  • இந்த நெல் ரகங்கள் 115 நாள் வயதுடையவை.

  • காற்றில் சாயாது. நல்ல மகசூல் தரவல்லது.

  • எனவே, விவசாயிகள் இந்த நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பாசியைக் கட்டுப்படுத்த யூரியாவைக் குறைக்க வேண்டும்- வேளாண்துறை அறிவுறுத்தல்!

பயிர்களின் ஊட்டச்சத்து மருந்தான பழக்கரைசல்! தயாரிப்பது எப்படி?

English Summary: Distribution of paddy seeds at 50% subsidy! Published on: 10 October 2020, 10:20 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.