1. விவசாய தகவல்கள்

உரமில்லா மாம்பழங்களுக்கு வரவேற்பு கிடைத்தும், நல்ல விலை இல்லை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Extra Welcome to Fertilizer Mangoes!

Credit : Benggood

உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல், சாகுபடி செய்யப்பட்டுள்ள மாம்பழங்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும் நல்ல விலைக் கிடைக்காததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மா சாகுபடி (Mango cultivation)

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த ஜல்லிப்பட்டி, சின்ன குமாரபாளையம், கொங்குரார்க் குட்டை, வாளவாடி ஆகிய பகுதி களில் அதிக அளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது.

மாம்பழம் விளைச்சல் (Mango yield)

குறிப்பாக குமாரபாளையம், கொங்குரார்க் குட்டை, வாளவாடி ஆகியப் பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் பாதிப்பு (Vulnerability of farmers)

நடப்பு ஆண்டில் பூக்கும் பருவத்தில் பெய்த மழை, கரோனா முடக்கத்தால் போதிய விலையின்மை, மகசூல் குறைவு போன்ற காரணத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இயற்கை முறையில் பழுத்தல் (Natural ripening)

இந்நிலையில், ஒரு சில விவசாயிகள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிமருந்துகளைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் மா சாகுபடி செய்துள்ளனர்.

மேலும் அந்த விவசாயிகள் இயற்கை முறையில் மாங்காய்களைப் பழுக்க வைத்து சந்தையில் விற்பனை செய்கின்றனர். எனினும், சந்தையில் மற்ற மாம்பழங்களை விட இவை குறைந்த விலைக்கே விற்பனையாவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இயற்கை முறையில் மா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது :

விலங்குகளால் சேதம் (Damage by animals)

பொதுவாக ரசாயனங்கள் பயன் படுத்தாமல் சாகுபடி மேற்கொள்ளும்போது பறவைகள் மற்றும் விலங்குகளால் சேதம் அதிகம் இருக்கும்.

எளிதில் உணரும் சக்தி (The power to feel easily)

ஏனென்றால் எது நல்ல பொருள் என்று மனிதர்களை விட எளிதில் உணரும் சக்தி அவற்றுக்கு உண்டு.

அதிக பொருட்செலவு (High cost)

தற்போதைய நிலையில் இயற்கை சாகுபடியைப் பொறுத்தவரை ரசாயன சாகுபடியை விட அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. உதாரணமாக களைக் கொல்லிகள் மூலம் களைகளைக் கட்டுப்படுத்த ரூ.500 செலவாகும்.

ரூ.10,000 வரை செலவு (Cost up to Rs.10,000)

நடப்பாண்டில் சில மாநிலங்களில் கைக் களை முறையில் ஆட்களைக் கொண்டு களை களை அகற்றுவதற்கு ரூ.10,000 வரை செலவு பிடிக்கிறது.

அதிக மனித சக்தி (More manpower)

மொத்தத்தில் இயற்கை சாகுபடிக்கு அதிகளவில் மனித சக்தி தேவைப்படுகிறது. ஆனாலும் நஞ்சில்லாத நல்ல பொருட்களை நம் குழந்தைகளுக்கு கொடுப்பது போல அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளோம்.

பக்குவமாக அறுவடை (Harvest ripe)

இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட மாங்காய்கள் முற்றியதும் கீழே விழாமல் பக்குவமாக அறுவடை செய்ய வேண்டும்.

அழுகிவிட வாய்ப்பு (Chance of rot)

இல்லாவிட்டால் பழுக்க வைக்கும் போது அடி பட்ட இடம் அழுகி விடும். மேலும் முற்றிய மாங்காய்களைப் பழுக்க வைப்பதற்கு வைக்கோல் மற்றும் சாக்குகளைப் பயன்படுத்துகிறோம். இவ்வாறுப் பழுக்க வைப்பதற்கு 6 முதல் 8 நாட்கள் தேவைப்படும்.

எடை குறையும் (Weight loss)

அத்துடன் 100 கிலோவுக்கு 20 கிலோ வரை எடை குறையும். இதனால் தான் பல வியாபாரிகள் செயற்கை ரசாயன முறைகளை கையாள்கிறார்கள். இயற்கையாகப் பழுத்த மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் படிக்க...

அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!

பருவம் தவறிய மழையால் பாதித்தது முந்திரி விவசாயம்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

English Summary: Extra Welcome to Fertilizer Mangoes!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.