Krishi Jagran Tamil
Menu Close Menu

முட்டையின் மணமும், குணமும் நிறைந்த ‘ப்ளாக் சால்ட்' : அதிகப்படியான எடைக்கு ஏற்ற மருந்து

Monday, 13 January 2020 05:03 PM , by: KJ Staff
Black Salt

உப்பு எங்கிருந்து எடுக்கப்படுகிறது???

உவர்ப்பு என்னும் சுவை உப்பின் மூலம் மட்டுமே கிடைக்கும். பொதுவாக கடல் நீரிலிருந்துதான் உப்பு பெறப்படுகிறது. ஆனால், பாறைகள் மூலமும்  உப்பு பெறப்படுகிறது. இது குறித்து நம்முள் பலருக்கு தெரியாது. இவ்வகை உப்பு இமய மலைப் பகுதிகளிலிருந்தும், நேபாளப் பகுதியிலிருந்தும் எடுக்கப்படுகிறது. கருப்பு உப்பு என்று அழைக்கப்படும் இதில், சோடியம் குளோரைடு இருந்தாலும், அது கடல் நீரில் எடுக்கும் உப்பில் இருப்பதை விட குறைவு. வட இந்தியாவில் 'காலா நமக்’என்று பெயர் கொண்ட கருப்பு உப்பையே அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த வகை, சோடியம் குறைவான கருப்பு உப்பு, நமக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அது என்னவென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

எரி மலைகளின் கல் உப்பு

கருப்பு உப்பு என்று அழைக்கப்படும் இவ்வகை உப்பு, இமயமலையின் அருகில் உள்ள பல்வேறு எரிமலைகளின் கல் உப்பு எனவும் சொல்லப்படுகிறது.  மேலும் ஹிமாலயன் பிளாக் சால்ட் (Himalayan black salt), சுலேமனி நமக், பிட் லோபோன், காலா நூன், படா நூன் என இமயமலை பகுதிகளில் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த உப்பின் மணமானது வித்தியாசமாக முட்டையின் மணத்தை போல் இருக்கும். சல்பர் இதில் கலந்திருப்பதால் இந்த மணம் வருகிறது. இந்த உப்பு கருப்பு மட்டுமல்லாமல் இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது. கருப்பு உப்பு ஆயுர்வேதத்தில் பல மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது.

வடஇந்தியாவில் அதிகம் பயன்படும் கருப்பு உப்பு

பங்களாதேஷ், நேபாளம், இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் உணவு வகைகளில் ஒரு வித்தியாசமான சுவையினை பெற, இவ்வகை உப்பு பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய இந்தியாவில் வடஇந்தியாவில் மட்டுமே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, பிரபலமான சாட்ஸ், சட்னி, சாலடுகள் போன்ற உணவுவகைகளிலும், எல்லா வகையான பழங்கள், ரைத்தாக்கள் மற்றும் பல சுவையான தென் இந்திய சிற்றுண்டிகளில் இந்த காலா நமக் சேர்க்கப்படுகிறது.

Best solution for weight loss

உடல் எடையை குறைக்கும் ‘பிளாக் சால்ட்’

உடல் எடை பிரச்சனையை குணமாக்க இந்த கருப்பு உப்பு பயன்படுகிறது. கடல் உப்பை நீங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு வரும் பொழுது உங்களுடைய உடல் எடையானது மிக வேகமாக அதிகரிக்கும். ஆனால் இந்த கருப்பு உப்பை நீங்கள் உணவில் சேர்த்து வரும் பொழுது உங்களுடைய உடல் எடையை குறைக்கும். பல உடல் எடை குறைக்கும் ஆயுர்வேத மருந்துகளில் இந்த கருப்பு உப்பே பயன்படுத்தப்படுகிறதாக கூறப்படுகிறது. உணவில் கருப்பு உப்பு மட்டுமே சேர்த்து சமைப்பது மூலம் உங்கள் உடல் எடை குறைவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

மருத்துவ பயன்கள் அளிக்கும் “காலா நமக்”

 • மூட்டு வலி, தசை பிடிப்பிற்கு, கருப்பு உப்பை வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவும். அதை, கொட்டி விடாதபடி ஒரு கெட்டியான துணியில் மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும். வலி இருக்கும் இடங்களில் உப்பு ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் தெரியும்.
 • ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் தொந்திரவு, ஜலதோஷம், மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும் பட்சத்தில், இன்ஹேலரில், கருப்பு உப்பினை பொடித்துப் போட்டு சுவாசித்தால், மூச்சுத்திணறல் இருக்காது.
 • சிறிது கருப்பு உப்பை நீரில் கரைத்துக் கொண்டு, அத்துடன், இஞ்சி, எலுமிச்சை சாறினை சேர்த்துப் பருகினால், மலம் இளகி வெளிப்பட்டுவிடும்
 • கொலாஸ்ட்ரல் அளவு அடிக்கடி வேறுபடாமல், ஆரோக்கியமான ஒரே நிலையில் பாதுகாக்கப் படுவதால், சீரான ரத்த ஓட்டம் இருக்கும். கெட்ட கொழுப்புத் தன்மையை மட்டுப்படுத்துகிறது.
 • கருப்பு உப்பில், ஆல்கலைன் நிரம்பி இருப்பதால், அதற்கு அமிலத் தன்மையைக் கட்டுப் படுத்தும் தன்மை இருப்பதால், நெஞ்செரிச்சலை நீக்குகிறது.
 • கருப்பு உப்பை உட்கொள்வதால், உறக்கத்தினைத் தரும் செரோடினின், மெலோடினின் ஆகிய இரு ஹார்மோன்களையும் பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளதால், தூக்கமின்மை பிரச்சனையும் நீங்கும்.
 • கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகப்படுத்தப்படாமல் வைத்திருக்கும் என்பதால், நீரிழிவு நோய்காரர்களை  இன்சுலின் போட்டுக் கொள்வதிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.
 • ஒரு தாமிரப் பாத்திரத்தில் சிறிது கருப்பு உப்பைப் போட்டு, மிதமான தீயில் வைத்து, உப்பு நிறம் மாறியவுடன், தீயிலிருந்து நீக்கி, அந்த உப்பினை சிறிது எடுத்து, நீரில் கரைத்துக் குடித்தால் ஆகாரம் உண்டவுடன், ஜீரணம் ஆகாமல், மேலுக்கு உணவு எதிர்த்து வருவதை தடுக்கிறது.
Hairfall solution

முடி உதிரும் பிரச்சைனையா??

 • கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால், நல்ல கருமை  நிறம் முடிக்கு  கிடைப்பதோடு, வெடிப்பும் நின்று போகும் என்கிறார்கள். தினமும், தக்காளி ஜூஸில், கருப்பு உப்பு கலந்து குடித்து வந்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம்.
 • இதனையடுத்து, குளிக்கும் நீரில் கருப்பு உப்பைக் கலந்து குளித்தால், சருமத்தில் வெடிப்புகள் விழாமல், வழவழப்பாக இருக்கும்.
 • கால் பாதங்கள் வீங்கி, வெடிப்புக்கள் இருந்தால், சிறிது கறுப்பு உப்பை, வெந்நீரில் கலந்து, பாத்திரத்தில் நிரப்பி, பாதத்தினை நீருக்குள் மூழ்கினாற்போல் வைத்திருந்தால், வீக்கமும் குறையும். வெடிப்புக்களும் மறையும்.

 இவ்வாறாக, பட்டியல் பெரிதாக போகும் அளவிற்கு, இந்த ப்ளாக் சால்ட்’டில் நன்மைகளும், மருத்துவ குணங்களும் நிரம்பி உள்ளது. எனினும், தென் இந்தியாவில் இதன் உபயோகம் மிகமிகக் குறைவு என்றே சொல்லலாம். அதற்கு காரணம், இந்த உப்பில் வரும் முட்டையின் மணம். முட்டையின் மணம் உள்ளது போலவே, முட்டையில் உள்ள குணங்கள் அனைத்தும் இந்த உப்பிற்கு உண்டு. எனவே, நமது உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, கருப்பு உப்பினை சாட் ஐட்டம், ரெய்த்தா, மோர், பழங்கள் முதலியவற்றில் சிறிது சேர்த்து உட்கொண்டு, நோய்களில் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள வேண்டும்.

M.Nivetha
nnivi316@gmail.com

Black Salt Benefits in Tamil Black Salt for constipation Black Salt uses for skin protection Best Alternative To Sea Salt Cures Intestinal Gas Problems Goodness of Black Salt in Tamil

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

 1. கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
 2. கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை
 3. கல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்
 4. விவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி
 5. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்
 6. உற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்
 7. கொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு
 8. 'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா?
 9. விவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு
 10. அதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.