
Do this to make dry hands smooth
இளம் தலைமுறையினர் சிலருக்கு வறண்ட கைகள் பிரச்சினையாக இருக்க கூடும். அதை எண்ணி கவலைப்பட்டு மனம் வருந்துவர். ஆனால், இனி நீங்கள் மனம் வருந்த வேண்டாம். வறண்ட கைகளை மிருதுவாக மாற்ற சில வழிமுறைகளை காண்போம் வாருங்கள்.
வறண்ட கைகள் (Dry Hands)
- ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி, அதில் விட்டமின் ‘இ’ ஆயிலை கலந்து அந்தக் கலவையை கைகளில் பூசி 10 நிமிடம் கழித்து மசாஜ் செய்து பின் துடைத்திட கைகள் மிருதுவாகும்.
- சமையல் செய்யும்போது காட்டன் கிளவுஸ் அணிந்துகொண்டால், கைகள் வறண்டு சொர சொரப்பாகாமல் இருக்கும்.
- கெமிக்கல் அதிகம் கொண்ட சோப், பவுடரை உபயோகிக்காமல் இருக்க, கைகள் சாஃப்ட்டாக இருக்கும். பாத்திரம் கழுவும் போது கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்ளலாம்.
- கருப்பான கை மூட்டுகளின் மீது எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து மென்மையாக தேய்த்து பின் கழுவி வர கருமை மாறும்.
- பாத்திரம் அல்லது துணிகளை கைகளால் துவைத்த பிறகு தேங்காய் எண்ணெயையோ அல்லது மாய்சரைசிங் கிரீமை தடவினால், கைகள் சொரசொரப்பாகாது
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். கைகள் எப்போதும் வறண்டு போகாது. மிருதுவாக தனித்தன்மையுடன் இருக்கும்.
மேலும் படிக்க
Share your comments