Krishi Jagran Tamil
Menu Close Menu

வெந்தயத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்.

Thursday, 18 April 2019 03:06 PM

வெந்தயத்தில் புரதம், கொழுப்பு, நீர், மாவு, ஆகிய சத்துக்குள் அடங்கியுள்ளன. மினெரல், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளது. நாம் தினமும் பயன்படுத்தும் சமையல் பொருள் ஆகும்.

வெந்தயத்தின் சிறந்த பயன்கள் :

வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி வெப்பத்தை குறைக்கிறது, மற்றும் மலச்சிக்கல் சீராக்கும். உடல் சூட்டினாலும் சிலருக்கு முடி கொட்டும் பிரச்சனை இருக்கும் எனவே வெந்தயத்தில் என்ன பசை இருப்பதால் முடி கொட்டுவது குறைந்து கருமையாகவும் நீளமாகவும் வளர உதவும். மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கிறது. வெந்தயத்தில் உள்ள கசப்பு தன்னை நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நல்ல மருந்தாக உள்ளது. வெந்தயம் ஊற வைத்த  நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் அல்சர் பிரச்சனைக்கு  தீர்வு உண்டாகும். வெந்தயத்தில் நார்சத்து இருப்பதால் அதீத பசி ஏற்படாமல் வயிற்றுக்கு தேவையானதை மட்டும் உட்கொள்ள உதவும். மற்றும் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை குறைக்கும். வெந்தயம் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று  வலிகளுக்கு வெந்தயமும் மற்றும்  ஊற வைத்த வெந்தய நீரும் வயிற்று வழியை வெகுவாக குறைக்கும். மேலும் சாதாரண வயிற்று வலிக்கும் நல்லது.

அதிகமாக எடுத்துக்கொள்வதால் வரும் பக்க விளைவுகள் :

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு, என்பதைப்போல எந்த ஒரு உணவு சார்ந்ததையும் அளவுக்கு அதிகமாக  எடுத்துக்கொண்டால் உடலுக்கு பாதிப்பை விலை விப்பதாகவே அமையும். அதிக அளவில் வெந்தயத்தை எடுத்துக்கொள்வதால் வாந்தி,குமட்டல் ஏற்படும். உணவுக்கோளாறு இருப்பவர்கள் வெந்தயத்தை உட்கொள்ளவே கூடாது மேலும் இதனை அதிகம் எடுத்துக்கொள்வதால்  வயிற்றுக்கோளாறு உண்டாகிறது. மேலும் நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றல் மருத்துவரை ஆலோசித்தே வெந்தயத்தை  உட்கொள்ள வேண்டும் இல்லையேல் இரண்டும் எண்டுத்துக்கொண்டாள் சர்க்கரையின் அளவு  மிகவும் குறைந்து விடும்.

Brinjal cultivation over use of side effect

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

CopyRight - 2019 Krishi Jagran Media Group. All Rights Reserved.