Krishi Jagran Tamil
Menu Close Menu

நாற்பது வகைக் கீரைகளும் அதன் பயன்களும்

Tuesday, 18 September 2018 09:31 AM
அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்
  1. அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

    2. காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

    3. சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும், பால்வினை நோயை குணமாக்கும்.

    4. பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

    5. கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

    6. மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

    7. குப்பைகீரை- பசியைத்தூண்டும்,வீக்கம் வத்தவைக்கும்.

    8. அரைக்கீரை- ஆண்மையைப் பெருக்கும்.

    9. புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

    10. பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

    11. பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

    12. பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

    13. சுக்கா கீரை-
    ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

    14. வெள்ளை கரிசலைக்கீரை-
    ரத்தசோகையை நீக்கும்.

    15. முருங்கைக்கீரை-
    நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

    16. வல்லாரை கீரை-
    மூளைக்கு பலம் தரும்.

    17. முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

    18. புண்ணக்கீரை
    - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

    19. புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

    20. நஞ்சுமுண்டான் கீரை
    - விஷம் முறிக்கும்.

    21. தும்பைகீரை-
    அசதி, சோம்பல் நீக்கும்.

    22. கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

    23. முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

    24. பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

    25. புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

    26. மணலிக்கீரை-
    வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

    27. மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

    28. முளைக்கீரை-
    பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

    29. சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

    30. வெந்தயக்கீரை-
    மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

    31. தூதுவளை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

    32. தவசிக்கீரை- இருமலை போக்கும்.

    33. சாணக்கீரை-
    காயம் ஆற்றும்.

    34. வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

    35. விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.

    36. கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.

    37. துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.

    38. துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

    39. காரகொட்டிக்கீரை-
    மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

    40. மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

CopyRight - 2018 Krishi Jagran Media Group. All Rights Reserved.