Krishi Jagran Tamil
Menu Close Menu

தினமும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

Saturday, 22 December 2018 04:06 PM

ஆற்றல் பெற்ற எண்ணெய்

 மற்ற எண்ணெய் வகைகளை காட்டிலும் சற்று அதிக விலையுடன் விற்க கூடிய இந்த தேங்காய் எண்ணெய்யில் பலவித நன்மைகள் உள்ளன. பொதுவாக இதை சமையலுக்கும், தலைக்கு தேய்க்கவும் மட்டுமே நாம் பயன்படுத்துவோம். ஆனால், இதனை தினமும் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வருவதால் உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை எண்ணில் அடங்காத மாற்றங்கள் உங்களுக்கு நடக்கும்.

வலுவான தசைகளுக்கு

ஜிம்மிற்கு சென்று படாதப்பாடு படுவோருக்கே இந்த குறிப்பு. நீங்க தினமும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிட்டு வருவதால் உங்கள் தசை வளர்ச்சி அதிகரிக்குமாம்.

சிறுநீரக பாதை தொற்றுகளுக்கு

 போதுமான அளவு நீர் அருந்தாத பலருக்கு சிறுநீரக தொற்றுகள் ஏற்பட கூடும். தேங்காய் எண்ணெய் இயற்கையிலே ஒரு ஆன்டி பையோட்டிக். எனவே, உங்களின் சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக்களை முற்றிலுமாக சரி செய்ய தினமும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிடுங்க. இவை சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்களை அழிக்க கூடிய ஆற்றல் கொண்டவையாம்.

கல்லீரலுக்கும்

 உடலின் மிக பெரிய உறுப்பான இந்த கல்லீரலில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவ்வளவு தான். உங்களின் கல்லீரல் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி தருகிறது இந்த 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய். கல்லீரல் அழுக்குகளை வெளியேற்றி அவற்றின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்கிறது.

உடல் எடை பருமன்

இந்த ஹார்மோன்களும் தான் நமது உடல் பருமனுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளன. ஹார்மோன்களை சமநிலையில் வைத்து உடல் பருமனாகாமல் பார்த்து கொள்கிறது. மேலும், அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் இது குறைத்து விடுகிறது. அத்துடன், இதிலுள்ள நல்ல கொலஸ்ட்ரால் உடல் எடையை கூடாமல் வைக்கிறது.

புற்றுநோய்க்கு

புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை இந்த தேங்காய் எண்ணெய்யிற்கு உள்ளது என ஆய்வுகள் சொல்கிறது. குறிப்பாக வயிற்று பகுதியில் ஏற்பட கூடிய புற்றுநோயை இது தடுக்கவல்லது. ஏனெனில், Helicobacter pylori என்கிற பாக்டீரியா வகை வயிற்று புற்றுநோயை ஏற்படுத்த கூடியது. இந்த வகை பாக்டீரியாக்களை அழிக்க 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் தினமும் சாப்பிட்டு வந்தால் போதும்.

இதய ஆரோக்கியத்திற்கு

 தேங்காய் எண்ணெய்யில் கெட்ட கொலஸ்டரோலை கட்டுப்படுத்தி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க கூடிய ஆற்றல் உள்ளது. அத்துடன் நல்ல கொலஸ்ட்ராலையும் இது உடலுக்கு தர கூடியது. இதிலுள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்டஸ் ரத்த நாளங்களில் உள்ள பிரச்சினைகளை குணப்படுத்த கூடியவை.

முழு உடலுக்கும்

உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள பலவித கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் இந்த 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யிற்கு உள்ளதாம். கல்லீரல், கிட்னி, இதயம், கணையம் போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு இது பெரிதும் உறுதுணையாக இருக்கிறது.

Coconut Oil Health benefits

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

  1. மண் வளத்தை காக்க சணப்பை சாகுபடி: துறை வல்லுநர்கள் ஆலோசனை யோசனை
  2. களப்பயிற்சியுடன் கூடிய இலவச வகுப்பு: கால்நடை மருத்துவ பல்கலை கழகம் அறிவுப்பு
  3. கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அழைப்பு
  4. வேளாண் அறிவியல் நிலையம் நடத்தும் ஒரு நாள் இலவசப் பயிற்சி
  5. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்
  6. இதயக்கோளாறுகளை சரி செய்ய உதவும் இயற்கை நிவாரணி: சிக்கு என்னும் `சீமை இலுப்பை'
  7. குறைந்து வரும் உற்பத்தி: இழப்பை தடுக்க தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை
  8. கோடை விற்பனையை கருத்தில் கொண்டு விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி
  9. சங்க காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ‘இடலை எண்ணெய்’ பற்றி தெரியுமா?
  10. நீரை சிக்கனப்படுத்தி, இரட்டிப்பு லாபம் தரும் பயறு வகை விதைப்பண்ணை

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.