1. வாழ்வும் நலமும்

ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

KJ Staff
KJ Staff

நினைவாற்றலை அதிகரிக்க

ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள்,சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.

இதய நோய்களின் அபாயத்தை குறைக்க

எளிதில் கரையக் கூடிய பெக்டின் என்னும் நார்ச்சத்து ஆப்பிளில் உள்ளது. இது உடலிலுள்ள மோசமான கொலஸ்ட்ரால்களை வெகுவாகக் குறைக்கிறது. இதனால் பலவிதமான இதய நோய்களும் குறைகின்றன.

அல்சைமர் நோயைத் தவிர்க்க.

ஆப்பிளில் குவெர்செட்டின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடெண்ட் அதிகம் உள்ளது. இது அல்சைமர் என்னும் மோசமான நரம்பு வியாதியைத் தடுப்பதில் வல்லது.

கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க

ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.

நீரிழிவை விரட்ட.

அதிகம் பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு வந்து விடுமோ என்று பயப்படத் தேவையில்லை. ஆனால், தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

நரம்பு மண்டலத்தை பாதுகாக்க

ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

 நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

ஆப்பிளில் உள்ள வைட்டமின்-சி, நமக்குத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

கண் புரையைத் தவிர்க்க.

ஆப்பிள் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், கண்களில் ஏற்படும் புரைகளைத் தவிர்க்க முடியும்.

நோய்களை குணப்படுத்த

சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட
சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும்.

சருமப் பாதுகாப்பிற்கு.

தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வருவதால் டாக்டரிம் போகத் தேவையில்லை என்பது மட்டுமல்ல, அழகுக் கலை நிபுணரிடம் செல்வதையும் தவிர்க்கலாம். ஆம், ஆப்பிளில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்ட்டின் ஆகியவை சருமத்தைப் பளபளப்பாக வைக்க உதவுகின்றன.

சீரான சுவாசத்திற்கு.

ஆப்பிளில் உள்ள பைட்டோகெமிக்கல்கள், ஆஸ்த்மா மற்றும் அலர்ஜி பிரச்சனைகளை அடியோடு விரட்டுகின்றன. மூக்கில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கி, சீரான சுவாசத்திற்கு இது வழி வகுக்கிறது.

எடை குறைப்பிற்கு.

ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதாலும், ஜூஸாக்கி சாப்பிடுவதாலும் உடல் எடை குறைகிறது.

புற்றுநோயை விரட்டுவதற்கு.

ஆப்பிள் பழத்தில் உள்ள குவெர்செட்டின் மற்றும் ட்ரைடெர்பினாய்டுகள் ஆகியவை, நுரையீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.

எலும்பு பாதுகாப்பிற்கு.

ஆப்பிளில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளைப் பாதுகாப்பதில் வல்லவை. எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்கின்றன.

English Summary: Health benefits of eating Apple Published on: 12 December 2018, 04:24 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.