Krishi Jagran Tamil
Menu Close Menu

இந்திய மசாலாக்களில் நிறைந்துள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்

Monday, 03 June 2019 04:53 PM

குங்குமப்பூ

மன அழுத்தம்,  மலச்சிக்கலால் ஏற்படும் செரிமானப் பிரச்சனை,  காய்ச்சல், உள்சோர்வு ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இது வாதம், குறைபாடு மற்றும் கருவுறாமை பிரச்னையை குணப்படுத்த பயன்படுகிறது.

இஞ்சி

ஜலதோஷத்தை நிவர்த்தி செய்ய கூடியது. தலைவலி, உடம்பு வலி, இதயநோய், குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, ஆகியவற்றிருக்கு சிறந்த இயற்க்கை உணவாக அமைகிறது.

மஞ்சள்

மஞ்சள் கலந்த பால், காய்ச்சல்மற்றும் இரும்பலை போக்க உதவுகிறது. இது ஒரு ஆண்டிசெப்டிக் இயற்கை மருந்தாகும். மஞ்சள் உபயோகிப்பதால் காயங்கள், சருமத்தில் அலர்ஜி, கொப்பளங்கள், பருக்கள் ஆகியவை முழுமையாக நீங்கி விடும்.

பெருங்காயம்

செரிமானத்திற்கு மிக சிறந்தது. இருமல், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற சுவாசக் கோளாறுகளின் சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் உள்ள ஆண்டிபயாடிக் பண்புகள் காரணமாக இது மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான  உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு பெருங்காயம் சிறந்த பலன் அளிக்கிறது.

இலவங்கப்பட்டை

இது சர்க்கரை செரிமானத்தில் உதவுவதால் நீரிழவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. உடல் சுறுசுறுப்பை அதிகரித்து இதய சுகாதாரத்தை மேம்படுத்துகிறது.

சீரகம்

சீரகத்தின் ஆண்டிசெப்டிக் பண்புகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிப்பதன் மூலம் காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, குமட்டல் ஆகியவற்றை கட்டுப்படுத்த சீரகம் உதவுகிறது.

கருமிளகு

இரும்பல், சளி, தொண்டை கரகரப்பு, ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வு அளிக்கிறது. இது இயற்கையில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பூண்டு

செரிமா பிரச்சனைகளுக்கு இயற்கையான மருந்தானது. தோல் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக அமைகிறது. ஆன்டிபாக்டீரியல் பண்புகள் கொண்ட பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

கிராம்பு

பல் வலி, ஈறுகளில் வீக்கம், இரத்த கசிவு, துறுநாற்றம், ஆகியவை குறையும். அடிக்கடி இரும்பல் ஏற்படுவதையும்,  மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

 

k.sakthipriya

krishi jagran 

indian spices organic tumeric ginger cloves garlic

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

CopyRight - 2019 Krishi Jagran Media Group. All Rights Reserved.