1. வாழ்வும் நலமும்

பசியும் பிணியும் இன்றி சமூகம் வாழட்டும் - உணவு பாதுகாப்பு தினம் இன்று!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Image credit by: samikhsya

மாறி வரும் உலகில் உணவே மருந்து என்ற நிலை மாறி உணவே விஷமாகி வருகிறது. உணவு பழக்கவழக்க மாற்றத்தால் சமச்சீர் கெட்டு நோய்த் தாக்குதலும் அதிகரித்து விட்டது. சிறு தானியங்களையும் நவதானியங்களையும் மறந்த நாம் துரித உணவுகளுக்கு அடிமையாக புதிய புதிய நோய்களை வரவேற்று வருகிறோம். இந்த நிலை மாற வேண்டும் இது நம் அனைவரின் பொறுப்பும் கூட. நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு வளமாக வாழ்வதே "உணவு பாதுகாப்பு நாள்" கடைப்பிடிப்பதன் நோக்கமாகும்.

உணவு பாதுகாப்பு நாள் தொடக்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) உலக சுகாதார அமைப்பு (WHO) இணைந்து உணவு பாதுகாப்பின் அவசியத்தைக் குறிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 7ம் தேதி உணவு பாதுகாப்பு தினம் (World food safety day) கடைப்பிடிக்கப்படும் என கடந்த ஆண்டு அறிவித்தது.

அதன் படி இன்று இரண்டாவது உலக உணவு பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப் பொருளாக "உணவு பாதுகாப்பு என்பது நம் அனைவரின் பொறுப்பு" (Food safety everyones business) என்பதை வலியுறுத்தும் விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பு

ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் உணவு விநியோகத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவுகளை உட்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.


Image credit by: Freepik

விஷமாகும் உணவுகள் (Food Poision)

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் நண்பர்களுக்கும் உணவு மற்றும் சிற்றுண்டிகளைத் தயாரிக்கும்போது, ​​உணவு விஷமாவதை (Food Posion) தடுக்க எளிய உணவு பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவது முக்கியம். நீங்கள் வீட்டு சமையல்காரராக இருந்தாலும், தொழில்முறை சமையல்காரராக இருந்தாலும், அல்லது செய்முறை எழுத்தாளராக இருந்தாலும், மளிகைக் கடையிலிருந்து சமையலறை மேஜை வரை உங்கள் உணவை பாதுகாப்பாக வைத்திருக்க உதவ சில எளிய வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம்.

தற்போது நாடு முழுவதும் கொரொனா தொற்று நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நாளில் நாம் நோயிலிருந்து நம்மையும், நம்மை நம்பி உணவுகளை உட்கொள்பவர்களையும் பாதுகாக்க நல்ல ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்புச் சத்து அதிகம் கொண்ட உணவு வகைகளை உட்கொள்வது அவசியமாகிறது.

அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்!

  • நன்றாக கைகளைக் கழுவுங்கள். இதன் மூலம் மட்டுமே ஏராளமான நோய்த் தொற்றிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளலாம்.

  • உங்கள் கைகள், பாத்திரங்கள் மற்றும் சமைக்கும் இடத்தையும் அடிக்கடி கழுவுங்கள்.

  • உணவு தயாரிப்பதற்கு முன்பும் ​​உணவு சமைத்த பிறகும் கைகளைக் கழுவுவது முக்கியம்

  • இறைச்சி, கோழி, கடல் உணவு அல்லது அவற்றின் சாறுகள் அல்லது சமைக்காத முட்டைகளை கையாண்ட பிறகு கைகளை கழுவுவது அவசியம்.

  • சாப்பிடுவதற்கு முன்னும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், டயப்பர்களை மாற்றிய பின் குழந்தையை சுத்தம் செய்த பிறகும் கண்டிப்பாக கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.

  • விலங்கு, விலங்குகளின் தீவனம் அல்லது விலங்குகளின் கழிவுகளைத் தொட்ட பிறகும், நோய்வாய்ப்பட்ட ஒருவரை கவனித்துக்கொள்வதற்கு முன்னும் பின்னும், ஒரு வெட்டு அல்லது காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்கு முன்னும் பின்னும் கைகளை கழுவ வேண்டும்

  • உங்கள் மூக்கை ஊதி, இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகும், பொதுவாகச் சமைக்க துவங்கும் முன் குறைந்தது 20 நொடிகள் உங்கள் கைகளை கழுவுவது மிக முக்கியம். 

மேலும் படிக்க...
கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!
வனம் காப்போம்.. மனிதம் வாழ!! - இன்று சுற்றுச்சூழல் தினம்!
உங்கள் ஆயுளை நீட்டிக்க இதை சாப்பிடுங்கள் போதும்!!

உணவு சமைக்கும் விதம்

  • உணவுகளைச் சமைக்கும் போது, அதற்கென தனித்தனி பாத்திரங்களையும் பயன்படுத்த வேண்டும்.

  •  

    காய்கறிகளையும், இறைச்சியையும் வெட்டும் போது தனித்தனி கத்திகளைப் பயன்படுத்த வேண்டும்.

  • இறைச்சி மற்றும் காய்கறிகளை அளவான சூட்டில் சமைத்து முடிந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட வெப்ப அளவில் சிறிது நேரம் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

  • அடுத்த வேளைக்கு அல்லது அடுத்த முறைக்கு என எடுத்து வைக்கும் உணவு அல்லது காய்கறி, இறைச்சிகளை அதற்குத் தகுந்தவாறு பதப்படுத்தி குளிர்சாதனப்பெட்டி அல்லது மைக்ரோவேவ் அவனில் பத்திரப்படுத்த வேண்டும்.

 

நாம் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதாது. நம் சுற்றத்தாரையும் பாதுகாப்புடன் வைத்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ இந்நாளில் உறுதியேற்போம்.



English Summary: Let us Think Food safety is everyones business on this second world food safety day Published on: 07 June 2020, 09:50 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.