Krishi Jagran Tamil
Menu Close Menu

அறுசுவையின் நன்மை தீமைகள்

Thursday, 06 December 2018 12:04 PM

அறுசுவையின் பண்புகள்

ஒவ்வொரு பொருளையும் அதனதன் சுவை, வீரியம், பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கார்ப்பு, கைப்பு, துவர்ப்பு என ஆறு வகையாகப் பிரித்துள்ளனர்.

இனிப்புச் சுவையின் தன்மை: மனதிற்கு மகிழ்ச்சி, ஐம்புலன்களுக்கு புத்துணர்ச்சி, உடலுக்கு இலகுத் தன்மை, ஏழு உடற்தாதுக்களுக்கும் ஊட்டம் கொடுத்தல், ஈரத்தன்மை, குளிர்ச்சி, கனம்.

இனிப்பு சுவை மிகுதி: உடல் எடை கூடுதல், தொட்டால் வலி, சோம்பல், அதிகத்தூக்கம், பாரம், பசியின்மை, அபரிதமான தசை வளர்ச்சி.

இனிப்பு சுவை குறைவு: உடல் அசதி, சோர்வு, புலன் உணர்வு குறைதல், ஏழு உடற்கட்டுகள் வன்மை குறைதல்.

புளிப்பு சுவையின் தன்மை: உமிழ்நீர்ச் சுரப்பு அதிகரித்தல், கண், புருவம் சுருங்கல், வாய் சுத்தப்படுதல், சீரணம் அதிகரித்தல், உடல் வலுப்படுதல், உடலில் சிறு வெப்பம், ஈரம்.

புளிப்பு சுவை மிகுதி: தாகம், கபம் நீர்மையாதல், பித்தம் அதிகரித்தல், செந்நீர் அதிகரித்தல், தசை கெடுதல், உடல் வீக்கம்.

புளிப்பு சுவை குறைவு: பித்தம் குறையும், பசியின்மை, வாயில் நீர் ஊறல், மூட்டுவலி, உடல் வறட்சி.

 உப்புச் சுவையின் தன்மை: உமிழ்நீர் அதிகம் சுரத்தல், தொண்டை கரகரப்பு, சீரணம் அதிகரித்தல், கபம் சுரத்தல், ஈரத்தன்மை, மிதவெப்பம்.

உப்புச் சுவை மிகுதி: பித்தம் அதிகரித்தல், தாகம், மயக்கம், உடற்சூடு, புண், அரிப்பு, தசை குறைவு, உடலின் பல பாகங்களிலிருந்தும் இரத்தம் வடிதல், விழுங்க முடியாமை, தோலில் சிறுபுண்கள்.

உப்புச் சுவை குறைவு: சுவையின்மை, வாந்தி, செரியாமை.

கார்ப்புச் சுவையின் தன்மை: பசி அதிகரித்தல், வாயில் எரிச்சல், சிறுவெப்பம், வறட்சி.

கார்ப்புச் சுவை மிகுதி: மலட்டுத்தன்மை, இரைப்பைப்புண், மயக்கம், மூச்சடைத்தல், தலை சுற்றல், தொண்டை எரிச்சல், அதிக வெப்பம், தாகம், நடுக்கம், காலில் குத்து வலி.

கார்ப்புச் சுவை குறைவு: பசியின்மை, செரியாமை. 

கச‌ப்புச் சுவையின் தன்மைகள்: வாயில் அழுக்கு நீக்குதல், நாக்கு மற்ற சுவைகளை உணர வைத்தல், பசியைத் துரிதப்படுத்துதல், கட்டிகளைப் போக்கல், வறட்சி, குளிர்ச்சி.

கச‌ப்பு சுவை மிகுதி: தடிப்பு, உடற்பருமன், உடற்கட்டுகளை மெலிய வைத்தல், உடல் வன்மை குறைதல், வாய் வறட்சி.

கச‌ப்புச் சுவை குறைவு: மூட்டு வலி, நாவறட்சி, உடல் வறட்சி.

 துவர்ப்பு சுவையின் தன்மை: பழுதடைந்த தாதுக்களை நெறிப்படுத்துதல், நாவின் சுவை அரும்புகள் சுருங்கல், மற்ற சுவை உணர்வுகளைத் தடுத்தல்.

துவர்ப்பு சுவை மிகுதி: வாய் வறட்சி, குருதிச் சுற்றோட்டம் பாதிக்கப்படுதல், வயிற்றுப்புசம், வாய்குளறல், சீரணம் பாதிக்கப்படுதல், பக்க வாதம், வலிப்பு, சுளுக்கு.

துவர்ப்புச் சுவை குறைவு: வாயில் நீர் ஊறல், மலம் இளகிச் செல்லல்.

 

Six type of Taste
English Summary: Six types of Taste merits and demerits

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. பான் அட்டைத் தொலைந்துவிட்டதா? கவலைவேண்டாம்! ஆன்லைனில் மறுபிரதி எடுத்துக்கொள்ள வழிமுறைகள்!
  2. PMKSY: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விருப்பமா? 100% மானியம் தருகிறது மத்திய அரசு!
  3. கொட்டித்தீர்க்கும் கனமழை - நீலகிரி, கோவை, தேனி, மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட்!
  4. RBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  5. இந்திய குடிமைப்பணி தேர்வு- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை!
  6. PM-Kisan திட்டம் : உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லையா? - விபரங்கள் இதோ!!
  7. மழையால் பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய்- கட்டுப்படுத்த எளிய வழிகள்!
  8. வங்கக்கடலில் மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வானிலை மையம் தகவல்!
  9. ஒகேனக்கல் அருவி பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!!
  10. 5 ஆயிரம் கால்நடைகளுக்கு காப்பீடு!- பயன் பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.