1. வாழ்வும் நலமும்

சிறிய பழம் அதிக பலன்! எலும்மிச்சை இயற்கையான சர்வ ரோக நிவாரணி.

KJ Staff
KJ Staff
lemon juice

எலும்மிச்சை பழம் பளீச்சென மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிய பழம் அதிக பலன் தரும். எந்த கால சூழ்நிலையிலும் குளிர்பானமாக, மருந்தாக பயன்படும் இந்த எலும்மிச்சையை தினமும் பயன் படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

நினைத்த நேரத்தில் சுவையான குளிர்பானமாகவும், பருக்கள், கருமை, போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் இருக்கும் இந்த எலும்மிச்சை பழத்தை எவ்வாறு பயன் படுத்துவது? எதற்கெல்லாம் நிவாரணியாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

எப்படி வாங்குவது?

நம்மில் பலபேருக்கு தெரியாது எலும்மிச்சை பழத்தை எப்படி பார்த்து வாங்குவது என்று. எலும்மிச்சை பழத்தின் தோல்கள் மெல்லிதாக இருந்தால் சாறு அதிகம் கிடைக்கும். அதனால் கடினமாக  இருக்கும் பழத்தை விட மெல்லிதாக இருப்பதை வாங்குங்கள்.

lemon

எலும்மிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்

100 கிராம் எலும்மிச்சை பழத்தில்:
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
புரதம் - 1.4 கிராம்
இரும்புசத்து - 0.4 மி.கி.
நீர்சத்து - 50 கிராம்
மாவுப்பொருள் -  11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்சத்து - 1.2 கிராம்
பாஸ்பரஸ் -  0.20 மி.கி.
கொழுப்பு - 1.0 கிராம்
சுண்ணாம்பு சத்து -  0.80 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.

எதற்கெல்லாம் உதவுகிறது

எல்லா விதமான புற்றுநோய் செல்களை வளர விடாமல் உடலை பாதுகாக்கிறது.

எலும்மிச்சைப் பழச்சாறு உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் தன்மை கொண்டதால் இதன் மூலம் தொழில் எரிச்சல், சரும நோய்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து உடலுக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கிறது.

எலும்மிச்சையில் சிட்ரஸ் அதிகளவில் உள்ளதால் இதனை பயன் படுத்தி வருகையில் முகத்தில் பருக்கள், கருமை நீங்கி சரும பளபளப்பை ஏற்படுத்துகிறது.

வாய் துற்நாற்றம், ஈறுகளில் வலி, எலும்மிச்சைசாறு பற்களுக்கும்,  பல் சார்ந்த சிரமங்களுக்கு சிறந்த நிவாரணி.

தினமும் மிதமான சுடு தண்ணீரில் எலும்மிச்சைசாறு சேர்த்து குடித்து வந்தால் செரிமானப் பிரச்சனை, அஜீரண கோளாறு, வாயிற் உப்பசம், போன்ற சிரமங்களுக்கு எலும்மிச்சைசாறு சிறந்த மருந்தாகும்.

உடல் எடையை குறைக்க தினம் மிதமான சுடு தண்ணீரில்  எலும்மிச்சைசாறு மற்றும் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை விரைவில் குறைவதை உணரலாம்.

எலும்மிச்சைப் பழச்சாறு சிறந்த “லிவர் டானிக்” என்றும், ஈரலின் செய்லபாட்டை அதிகரித்து செரிமானப் பிரச்னையை சரி செய்ய உதவுகிறது

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் எலும்மிச்சைப் பழச்சாறை பருகிவர தலை சுற்றல், மன அழுத்தம் போன்றவற்றை குறைத்து, இரத்தத்தை சுத்தம் செய்கிறது.

lemon

எவ்வாறு பயன் படுத்துவது

வயிற்று பொருமல்(வயிற் உப்பசம்)

வெந்நீருடன் எலும்மிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.

தாகத்தை தணிக்க

எலும்மிச்சை சாறு 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.

கல்லீரல் பலப்பட

எலுமிச்சை சாறு எடுத்து சிறிது தேன் கலந்து குடிக்கவும்.

தலை வலி நீங்க

காபி அல்லது தேநீரில் அரை எலும்மிச்சை பழத்தை சாறு பிழிந்து குடிக்கவும்.

நீர் கடுப்பு நீங்க

எலும்மிச்சை சாறுடன் சிறிது உப்பு சேர்த்து குடிக்கவும்.

பற்களில் மஞ்சள் பழுப்பை போக்க

எலும்மிச்சம் பழம் தோலை உட்பகுதியினை பற்களில்  தேய்த்து வர  மஞ்சள் பழுப்பு நீங்கும்.

குறிப்பு: உடல் சோர்வு, நமைச்சல், நீங்கும், வயிற்று வலியை குறைக்கும். இயற்கையான சர்வ ரோக நிவாரணி.   

 

K.Sakthipriya
Krishi Jagran  

English Summary: small fruit solution for whole body: lemon, natural juice also as medicine

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.