Krishi Jagran Tamil
Menu Close Menu

கரும்பை விட 200 மடங்கு இனிப்பு தன்மை கொண்டது: எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ள ஸ்டீவியா என்னும் சர்க்கரை துளசி

Saturday, 08 June 2019 11:37 AM

சர்க்கரை நம் தினசரி வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலையில் சர்க்கரை சேர்த்த டீ, காபி அருந்தினால் தான் நாளின் துவக்கம் சுறுசுறுப்பாக அமையும் என்று நம்மில் பலரும் நம்புகிறோம். ஆனால் நாம் சாப்பிடும் இந்த சர்க்கரையில் கலந்துள்ள இரசாயனம், கெட்ட கொலஸ்ட்ரால் இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை நாம் நினைத்ததுகூட இல்லை. இதற்கு தீர்வாக இயற்கை நமக்கு கொடுத்துள்ள ஒரு அற்புதமான மூலிகை செடிதான் இந்த இனிப்பு துளசி. இதனை ஆங்கிலத்தில் ஸ்டீவியா என்பர். இதில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணங்கள் நம் உடலுக்கு சிறந்த நன்மைகள் அளிக்கின்றன.

ஜப்பான், சீனா, கனடா,கொரிய, தயிலன்ட், நாட்டின் மக்கள் அனைவரும் சர்க்கரைக்கு பதிலாக இந்த சர்க்கரை துளசியை  பயன்படுத்துகின்றன. பல வருடங்களுக்கு முன்பே  இந்த செடி நம் நாட்டிற்கு வந்திருந்தாலும் இதன் பயன்கள் இப்பொழுதான் மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

இயற்கையாகவே கரும்பை விட 200 மடங்கு இனிப்பு தன்மை கொண்டுள்ளது. இதில் "0" கேலரிஸ் உள்ளது. கார்போஹைட்ரெட்ஸ், சோடியம், மெக்னீசியம், கால்சியம், பொஸ்போருஸ், வைட்டமின், ஜின்க், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

இது உடலில் இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை  கட்டுப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை குறைகிறது. இதயம் சம்பந்தப்ட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கிறது. கெட்ட  கொழுப்புகள் அதிகரிப்பதை தடுத்து உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கிறது. நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இது சிறந்த முறையில் மருந்தாக அமைகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற தன்மை  உடலில் புற்றுநோய் உண்டாவதை தடுக்கிறது. இதில் உடலில்  ஏற்படும் பாக்டீரியாவை அளிக்கிறது.

இனிப்பு பொருள்களில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இந்த சர்க்கரை துளசியை பயன்படுத்துவது சிறந்தது.  

டீ, காபி, மற்றும் மேலும் பல இனிப்பு பொருள்களில் சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். வீட்டில் 2, 3 செடிகள் இருந்தாலே போதும் வருடம் முழுவதிற்குமான சர்க்கரை இதில் இருந்து கிடைத்து விடும்.

 

k.sakthipriya

krishi jagran

stevia herbal plant சர்க்கரை துளசி மூலிகை செடி

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

CopyRight - 2019 Krishi Jagran Media Group. All Rights Reserved.