1. வாழ்வும் நலமும்

மூளையை பாதிக்கும் சர்க்கரை! ஆய்வில் தகவல்!

KJ Staff
KJ Staff

Credit : YaleNews - Yale University

வீட்டின் ஆரோக்கியம் இல்லத்தரசிகள் கையில் என்பதை மறுக்க முடியாது. அன்றாடம் சமைக்கும் உணவு உடலுக்கு ஊட்டச்சத்து (Nutrition) கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும். மூளையை பாதிக்கும் எந்த வகையான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். கடுகு எண்ணெய், நினைவாற்றலை (Memory power) பாதிக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். அதனால் ஆலிவ் எண்ணெய் போன்ற மூளை ஆரோக்கியத்துக்கு உதவி செய்யும் எண்ணெய் பயன்படுத்தலாம்.

சர்க்கரையை குறைக்கலாம்:

சர்க்கரை, ரத்தத்தில் குளுக்கோஸை கட்டுப்படுத்தும் ஹார்மோனை (Hormone) உற்பத்தி செய்யும். இது மூளையின் நினைவாற்றலுக்கு முக்கியமான ஹிப்போ காம்பஸை (Hippo Compass) வீக்கமடைய செய்வதால், மூளை 100% வேலை செய்வதில் குறைபாடு ஏற்படும். சர்க்கரையை தவிர்க்க முடியாது, ஆனால் குறைக்கலாம்.

மூளை பாதிப்பு

துரித உணவுகள், ஆரோக்கியமற்ற கார்போஹைட்ரேட் (Carbohydrate) கொண்டவை. இது மந்தமான மனநிலை, மனச்சோர்வு மற்றும் பசி உணர்வை கட்டுப்படுத்தும். ​டிரான்ஸ் கொழுப்புகள், செயற்கையாக பதப்படுத்தப்பட்ட எண்ணெய்களில் உள்ள இவை அல்சைமர் நோய், நினைவாற்றல் பிரச்னையை ஏற்படுத்தும். வறுத்த உணவுகள், டோனட்ஸ், வறுத்த இறைச்சிகள், பீட்சா, ரொட்டி, க்ரீம்களில் ட்ரான்ஸ் கொழுப்புகள் அதிகமுள்ளன. செயற்கை இனிப்பு பானங்கள், நாவிற்கு சுவையளித்தாலும், மூளைக்கு நல்லதல்ல. இதிலுள்ள ஃபெனாலாலனைன் (Phenylalanine), மெத்தனால் மற்றும் அஸ்பார்டிக் அமிலம், நரம்பியல் பிரச்னையை ஏற்படுத்தி, மூளை பாதிப்பை அதிகரிக்க செய்யும்.

ஆல்கஹால், அதிகமாகும் போது மந்தமான பேச்சுத்திறன், எதிர்மறை தாக்கங்கள், நடைப்பயிற்சி (walking) மற்றும் மூளை பாதிப்பை உண்டாக்கலாம். சிலர் மனநோயாலும் பாதிக்கப்படுவர். பாதரச மீன்கள், அசைவ உணவு உண்பவர்கள் மீன் அதிகம் சாப்பிடுவது உண்டு. சில மீன்கள் பாதரசம் கொண்டு பதப்படுத்தப்படுகிறது. அவை குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் வளர்ந்த மூளை செல்களுக்கும் தீங்கு விளைவிக்கும். வாள்மீன், டூனா, கானாங்கெளுத்தி, விலாங்குமீன், சூரை மீன், சுறா மீன், கோய் மீன் போன்றவை பாதரசம் நிறைந்த மீன்கள்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கொரோனாவை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி! ஆய்வில் தகவல்!

English Summary: Sugar that affects the brain! Information in the study!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.