1. வாழ்வும் நலமும்

செரிமானத்தைத் தூண்டும் தான்றிக்காய்! இயற்கை அளித்த வரப்பிரசாதம்!

KJ Staff
KJ Staff

Credit : Dinakaran

இயற்கை நமக்களித்த வரங்களில் ஒன்று தான் தான்றிக்காய் (Terminalia Belerica). இதில், ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. செரிமானத்தைத் தூண்டும் அரிய மருந்தாகப் பயன்படுகிறது தான்றிக்காய். தான்றி ஓர் இன மரமாகும். இது தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. மார்ச் முதல் மே வரையான காலத்தில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் மலரும். பின்னர் உருண்டை வடிவிலான ஐந்து பள்ளங்களைக் கொண்ட காய்கள் தோன்றிப் பின், சாம்பல் நிறப் பழங்களாக மாறும்.

தான்றிக்காயின் நன்மைகள்:

  • தான்றிக்காயில் வைட்டமின் F அதிகமுள்ளதால் இருமல் மற்றும் ஆஸ்துமாவை (Asthma) குணப்படுத்தும் திறன் பெற்றது.
  • தொண்டையில் ஏற்படும் கமறல், வாய் துர்நாற்றத்தை போக்கும்.
  • முடி வளர்ச்சிக்கு நன்முறையில் உதவும்.
  • நோய் எதிர்ப்பாற்றலை (Immunity) அதிகரிக்க வல்லது.
  • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை (Fat) அகற்றி சுத்தப்படுத்தும்.
  • வெந்நீர் கொண்டு அரைத்து புண்களின் மீது போட்டால், விரைவில் ஆறும்.
  • கடுக்காய், நெல்லிக்காயுடன் (Gooseberry) தான்றிக்காய் பொடி சேர்த்து பல் துலக்கி வந்தால், பல் இறுகி, ஈறுகளும் பலப்படும்.
  • இரவுஒரு தேக்கரண்டி தான்றிக்காய் பொடியை சாப்பிட மலக்கட்டு தீரும்.
  • அதிமதுரம், திப்பிலி மற்றும் தான்றிக்காய் சேர்த்து கசாயம் செய்து 60 மிலி வரை குடிக்க இருமல் மற்றும் செரிமான பிரச்னை (Digestive problem) குணமாகும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

உணவு மற்றும் விவசாய அமைப்பு உருவாக்கப்பட்டதன் 75 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்!

40 மில்லியன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!உலக உணவு தினத்தில் வேளாண் கல்லூரி முதல்வர் கவலை!

English Summary: Terminalia Belerica stimulates digestion! Nature's gift!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.