Krishi Jagran Tamil
Menu Close Menu

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டியவை

Monday, 03 December 2018 05:30 PM

நோயெதிர்ப்புச் சக்தி

பருவகால மாற்றத்தின் பொழுது தடிமனும் காய்ச்சலும் வந்துவிடுகின்றது. காலநிலை மாறும் போதெல்லாம், தலையிடி, தடிமன், காய்ச்சல் வந்துகொண்டிருந்தால் உங்கள் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி போதியதாக இல்லை என்பதை அறிந்துகொள்ளவேண்டும். உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்கு பல வழிகள் உண்டு.

உங்கள் உடலை தற்காத்துக்கொள்ளும் விலைமதிப்பற்ற சொத்து - 'நோயெதிர்ப்புச்சக்தி'. இந்த நோயெதிர்ப்புச்சக்திக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் உணவும் வாழ்க்கை முறையும் முதலிடத்தைப் பெறுகின்றது. அடுத்து மனவழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் மனதை ஆறுதல்படுத்திக் கொள்வதும் முக்கியமாகின்றன.

செய்யவேண்டியது என்ன?

 • புகை பிடிக்கும் பழக்கம் இருப்பின் அதனை கைவிடவேண்டும். நல்ல நிறமான பழங்கள், காய்கறிகளை அதிகமாக உண்ண ஆரம்பியுங்கள்.
 • சரியான நேரத்தில் உண்பதோடு, ஆரோக்கியமான உடல் எடையையும் பேணி வாருங்கள். போதுமான நித்திரை, முறையான உடற்பயிற்சி என்பன உடலுக்கு மிகவும் அவசியம்.
 • மனதுக்கு ஆறுதலாகவும் மனவழுத்தங்களை குறைத்தும் பழகிவருவது தேவையானது.
 • உயர்ந்த அளவில் நார்ச்சத்தையும் குறைவான கொழுப்பையும் கொண்ட உணவுகளை உண்டுவருவதும் முக்கியம்.
 • முறையான உணவுதான் சிறப்பான மருந்து என்பார்கள். சரியான உணவுப்பழக்கத்திற்குத்தான் முதலிடம் வழங்கப்படுகின்றது.
 • ஆரோக்கியத்தைத் தராத உணவுகளை உண்டுவிட்டு சில விட்டமின் 'சி' மாத்திரைகளை விழுங்கிவிட்டால் ஆரோக்கியம் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கக் கூடாது.
 • தினமும் சத்தான உணவை முறையாக எடுப்பதன் மூலம் உடலின் நோயெதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்தி நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கக்கூடும்.

அதிக தண்ணீர் அருந்துதல்:

நாளொன்றுக்கு 6 முதல் 8 குவளை தண்ணீரை அருந்துவதன் மூலம் உடல் முதலாவது பாதுகாப்பு அரணை இட்டுக்கொள்ளும்.

Immunity power increasing tips
English Summary: Tips to improve the Immunity power

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

 1. செயல்பாட்டிற்கு வர காத்திருக்கும் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள்
 2. ஆராய்ச்சி மையம் அமைக்க கால்நடை வளர்ப்பவர்கள் வலியுறுத்தல்
 3. கரோனாவிற்கு கபசுர குடிநீர் தீர்வாகுமா? அரசு சித்த மருத்துவமனைகளில் விநியோகிப்பது எதனால்?
 4. வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வழங்கும் ஆலோசனை
 5. ஜீரண கோளாறா? நம் முன்னோர்கள் கையாண்ட எளிமையான தீர்வு
 6. கரோனா காலகட்டத்தில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
 7. கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
 8. கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை
 9. கல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்
 10. விவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.