1. வாழ்வும் நலமும்

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Traditional Medicine Courses: Apply Online From Today!

Credit :mschennai.ac.in

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான  (Traditional Medicine) இணையவழி (Online) விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

330 இடங்கள் (330 Seats)

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ், சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யுனானி மருத்துவக் கல்லூரியில் உள்ள 60 இடங்களும் உள்ளன.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியின் 100 இடங்களும், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றுள்ள 50 இடங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் உள்ள 60 இடங்கள் என 5 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்களுக்கு இந்த மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. எஞ்சிய 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.இதேபோல் 20 தனியாா் கல்லூரிகளில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.

இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (BSMS,BAMS, BUMS, BHMS) பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தோ்வு மதிப்பெண் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. இந்தப் படிப்புகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் இணையதளத்தில், இன்று முதல் 30-ஆம் தேதி வரை, காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தையும், தகவல் தொகுப்பையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் வரும் 31-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு செயலாளா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, இயக்குநா் அலுவலகம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

2021ம் ஆண்டின் அதிக சம்பளம் வழங்கும் தொழில் துறைகள் - விவரம் உள்ளே!!

IT refund: உங்கள் கணக்கில் வந்துவிட்டதா? வரி செலுத்திய 89 லட்சம் பேருக்கு ரீஃபண்ட்

2020ம் ஆண்டுக்கான தேசிய தண்ணீர் விருதுகள் -விண்ணப்பிக்க அழைப்பு!

English Summary: Traditional Medicine Courses: Apply Online From Today!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.