Krishi Jagran Tamil
Menu Close Menu

பழ பயிர் சாகுபடி – பெருநெல்லி

Monday, 03 December 2018 05:10 PM

 

இரகங்கள்: பனாரசி, என்ஏ7, கிருஷ்ணா, கஞ்சன், சக்கயா மற்றும் பிஎஸ்ஆர்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

பெருநெல்லி வறட்சிப் பிரதேசங்களிலும், நிலச்சரிவுகளிலும் அதிகமாகப் பயிரிட ஏற்றதாகும். இம்மரத்தினை வளர்ப்பதன் மூலம் மண் சரிவு, மண் சரிவு, மண் அரிப்பு ஏற்படுவதைத் தவிர்த்து மண்களின் தன்மைகள் கெடாமல் நிலைப்படுத்த முடிகின்றது.

சிறப்பு அம்சங்கள்

பவானிசாகர் 1 பெருநெல்லி சராசரியாக மரத்திற்கு ஆண்டொன்றுக்கு 155.05 கிலோ (42,952 கிலோ / எக்டர்) விளைச்சல் கொடுக்கவல்லது. இது நாட்டு இரகத்தைவிட (123.03 கிலோ ஒரு மரத்திற்கும் 34,679 கிலோ ஒரு எக்டருக்கும்) 26.01 சதம் கூடுதல் ஆகும். இதன் மரங்கள் சுமாராகப் பரவும் தன்மையும் உயர்ந்து வளரும் குணமும் கொண்டிருப்பதால் அதிக மரங்கள் நடுவாற்கு ஏற்றதாகும். இந்த இரகம் பின் பருவத்தில் முதிர்ச்சியடைவதால் விற்பனையில் அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

விதையும் விதைப்பும்

மொட்டு கட்டு முறை மற்றும் திசு வளர்ப்பின் மூலம் நல்ல தரமான பெருநெல்லி நாற்றுக்களை உருவாக்கலாம். மொட்டு கட்டும் முறையில், விதை மூலம் வேர் நாற்றுக்களை உருவாக்கி ஓராண்டு சென்ற பின்னர் தண்டின் பருமன் ஒரு செ. மீ இருக்கும்போது தாய் மரத்திலிருந்து மொட்டுக்களைத் தேர்ந்தெடுத்து. பிரித்து ‘1’ வடிவில் வேர் நாற்றில் உட்புகுத்தித் தரமான நாற்றுக்களை தாய் மரத்தின் மரபியல் தன்மைகள் மாறாது உருவாக்கலாம்.

நடவு

ஜூன் / ஜூலை மற்றும் செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் பெருநெல்லி நாற்றுக்களை நடுவது சிறந்தது. நடுவதற்கு ஒர மாதம் முன்னதாக ஒரு மீட்டர் முன்னதாக ஒரு மீட்டர் நீளம் x அகலம் x ஆழம் உள்ள குழிகளைத் தோண்டி 9 மீ x 9 மீ என்ற இடைவெளியில் நடலாம்.

இளஞ்செடி பராமரிப்பு

இளம் நெல்லி செடிகளை இரண்டு அடி உயரத்திற்கு பக்கக் கிளைகள் வளரவிடாமல் நேர் செய்து பின்னர் 4-5 கிளைகளைத் தகுந்த இடைவெளியில் சுற்றிலுமாக வளருமாறு விட்டு பராமரித்தல் மிகவும் அவசியமாகும்.

 

நீர் நிர்வாகம்

இளஞ்செடிப் பருவத்திலும், மரமாகும் வரையிலும் கோடைக்காலத்தில் மட்டும் நீர் பாய்ச்சுதல் போதுமானது. சொட்டு நிர்ப்பாசனம் மூலம் 40 - 50 சதவிகிதம் நீரை சேமிக்கலாம்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

இளஞ்செடிகளுக்கு செடி ஒன்றிற்கு 20 கிலோ தொழு எருவும், மரங்களுக்கு 20 கிலோ தொழு எருவுடன் ஆண்டுதோறும் ஒன்றரை கிலோ யூரியா, 1 கிலோ  சூப்பர் பாஸ்பேட்டு மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரங்களை இரு சம பாகங்களாகப் பிரித்து சூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் இடலாம்.

போராக்ஸ் நுண்ணூட்டம் தெளித்தல்

காய்களில் கரும்புள்ளிகளும், பழுப்பு கலந்தும் காணப்படுவது போரான் (பெரிகச்சத்து) குறைபாட்டின் அறிகுறியாகும். இதனைத் தவிர்க்க 0.6 சதம் போராக்ஸ் செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் இருமுறை தெளிக்கலாம்.

பெருநெல்லி பூத்தல்

தென்னிந்திய சூழ்நிலையில் வருடத்தில் பிப்ரவரி / மார்ச் மாதங்களில் மரத்துவாரங்களில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் ஊற்றி பஞ்சினால் அடைக்கலாம். தண்டு முடிச்சுப் பூச்சிகளை 0.2 சதம் பார்த்தியான் மருந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம். பழங்கள் சேமிப்பின்போது தோன்றும் நீலப் பூசணத்தை உப்பு நீரில் காய்களைக் கழுவி கட்டுப்படுத்தலாம்.

போராக்ஸ் நுண்ணூட்டகம் தெளித்தல்

காய்களில் கரும்புள்ளிகளும், பழுப்பு கலந்தும் காணப்படுவது போரான் (பெரிகச்சத்து) குறைபாட்டின் அறிகுறியாகும். இதனைத் தவிர்க்க 0.6 சதம் போராக்ஸ் சத்தை செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் இருமுறை தெளிக்கலாம்.

அறுவடை

மொட்டுக்கடி உருவாக்கப்பட்ட பெருநெல்லிச் செடிகள் நட்ட 4-5 ஆண்டுகளில் காய்க்கும்.

மகசூல்

நன்கு பராமரிக்கப்பட்ட மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 150-200 காய்கள் கிடைக்கும். அதாவது 100 கிலோ மகசூல் ஒரு மரத்தில் கிடைக்கும்.

நோய்

வட்டமான துரு போன்ற அமைப்புகள் இலைகள் மற்றும் காய்களில் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திற்குள் 7-28 நாள் இடைவெளியில் 0.2 சதவிகிதம் மேன்கோஜிப் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

Cultivation method of Amla

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

CopyRight - 2019 Krishi Jagran Media Group. All Rights Reserved.