1. தோட்டக்கலை

பயிர்களின் ஊட்டச்சத்து மருந்தான பழக்கரைசல்! தயாரிப்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

அனைத்து வகை பயிர்களுக்கும், சிறந்த ஊட்டச்சத்து மருந்தாக செயல்படும், பழக்கரைலைத் தயாரிப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள் (Ingradients)

அமிலத்தன்மை அற்றப் பழங்களான

பப்பாளி                             - 2 கிலோ

நெல்லி                               - 2 கிலோ              

கொய்யா                           - 2 கிலோ

வாழை                               - 2 கிலோ

பனம்                                  - 2 கிலோ

நாட்டுமாட்டுக் கோமியம்      - 1லிட்டர்

செய்முறை  (Method)

  • பழங்களை சுமார் 15 லிட்டர் கொள்ளவு கொண்ட பாத்திரத்தில் போட்டு, இறுக்கமாக மூடிவிடவும். இரண்டு நாள் கழித்து கோமியத்தை ஊற்றி நன்கு கலக்கி விடவும்.

  • இந்த கலவையை தினமும் தவறாமல் கலக்கிவிடவும்.

  • 30 நாட்கள் கழித்து பார்த்தால் பழக்கரைசல் தயாராகியிருக்கும்.

அளவு (Quantity)

இந்தக் கரைசலை 1:10 என்ற விகிதத்தில் தண்ணீருடன் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
இதனை ஜீவாமிர்தத்திற்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

பயன்கள் (Benefits)

  • அவ்வாறு பயன்படுத்தும் இந்த கரைசல், பயிர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து மருந்தாக செயல்பட்டு, மகசூலை அதிகரிக்க உதவும்.

  • இது ஒரு வளர்ச்சி ஊக்கியாக செயல்பட்டு, பயிர்களில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும்

  • தழைச்சத்தை கொடுத்து, பயிர் வளர்ச்சி சீராக வைக்கும்.

  • மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்து பூக்கும் தன்மையையும் உயர்த்தும்.

  • தரமான காய்கறிகள் கிடைக்கும்

  • பயிர்களுக்கு ஒவ்வாத மனத்தை ஏற்பத்தி பூச்சிகளை விரட்டும்

  • விவசாயிக்கு செலவையும் குறைக்கும்

மேலும் படிக்க....

PMMSY : கால்நடை வளர்ப்போருக்காக e-Gopala App- அனைத்து தகவலும் உங்கள் கையில்!!

100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு!

English Summary: Crop Nutrient Fruit Solution! How to prepare?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.