1. தோட்டக்கலை

தொடர் மழை எதிரொலி-உப்பு விலை உயரும் அபாயம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Echo of continuous rain-salt prices at risk!

Credit : Food Navigator Asia

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல ஏக்கரில் உப்பளங்கள் (Salts on several acres)

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி காஞ்சிரங்குடி, உப்பள ஆனைகுடி, மோர்க்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன.

உப்பு உற்பத்தி பாதிப்பு (Impact of salt production)

  • இந்த ஆண்டு அக்டோபர் முதல் ஜனவரி வரை வரை பெய்த தொடர் கனமழையால் உப்பா பாத்திகளில் வெள்ள நீர் புகுந்ததால் உப்பு உற்பத்தி தடைபட்டது.

  • எட்டு மாதங்கருக்கு முன் சேகரித்து வைக்கப்பட்டிருந்த உப்பு தற்போது தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பும் பணி நடந்து வருகிறது.

  • பாத்திகளில் நிரம்பியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தண்ணீர் வற்றியவுடன் ஜிப்சம் வெட்டி எடுக்கப்படும்.

  • அதன் பின்னர் ஒவ்வொரு பாத்தியிலும் தண்ணீர் பாய்ச்சப்பட்டு உப்பு உற்பத்தி தொடங்கப்படும்.

  • இங்கு விளை விக்கப்படும் உப்பு கெமிக்கல் தொழிற்சாலை, உணவுக்காக பிற இடங்களுக்கு அனுப்பப்படுகிறது.

  • உப்பு உற்பத்தி இல்லாததால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல ஆயிரம்  தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

  • நன்றாக தண்ணீர் வற்றிய பிறகே உப்பு உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்ப்பதாக உப்பளத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க....

PM Kisan திட்டத்தில் விதிகள் மாற்றம் - விண்ணப்பதாரரின் பெயரில் நிலம் இருக்க வேண்டியது கட்டாயம்!

விவசாயிகளின் குறையை தீர்க்க ஆவண செய்யப்படும்! - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Crop loan waiver: பயிர்கடன் தள்ளுபடி எதிரொலி : கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் விவரங்கள் சேகரிப்பு!!

English Summary: Echo of continuous rain-salt prices at risk!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.