1. தோட்டக்கலை

வீட்டுத் தோட்ட நீர்ப் பாசனத்திற்கு அரசு மானியம்! ஒரே நேரத்தில் 60 செடிகளுக்கு நீர் பாய்ச்சலாம்

KJ Staff
KJ Staff
Terrace Garden
Credit : India Mart

நகரங்களில் வசிப்பவர்கள் மாடித் தோட்டம் (Terrace Garden) அமைக்க ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசின் தோட்டக்கலை துறை (Horticulture department) மானிய விலையில் விதைகளும், உபகாரணங்களும் வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கும், அதற்கு நுண்ணீர் பாசன கட்டமைப்புகளை வழங்குவதற்கும் புதிய திட்டத்தை துவங்கி உள்ளது. இந்த வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான திட்டம் பெருநகரங்களில் ஏற்கனேவே செயலப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

மானிய விலையில் விதைகள்:

தோட்டக்கலை துறை வழங்கும் இந்த திட்டத்தின் கீழ், வீட்டுத்தோட்டம் அமைக்க தேவையான பாலிதீன் பைகள், தென்னை நார் கழிவுகள், காய்கறி விதைகள் (Vegetable seeds), கீரை விதைகள், மற்றும் அவற்றுக்கு தேவையான நுண்ணுாட்ட சத்துக்கள் போன்றவற்றை மானிய விலையில் (Subsidy) வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலை போக ரூபாய் 500 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். நாம் அமைக்கும் வீட்டுத் தோட்டத்திற்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அது மட்டுமல்லாமல் தண்ணீரை தோட்டத்திற்கு திறந்து விட்டுவிட்டு குழாயை அடைக்க மறந்து விடுவோம்.

நீர் பாசன வசதி

நாம் பயன்படுத்தும் தண்ணீரை சிக்கனம் செய்யும் வகையிலும், தோட்டத்தில் வளர்க்கும் செடி, கொடிகளின் சாகுபடியை (Cultivation) அதிகரிக்க செய்யும் வகையிலும், அவைக்கு நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் தேவைப்படும். இவையனைத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ள தமிழக அரசின் தோட்டக்கலை துறை மானிய விலையில் நுண்ணீர் பாசன கட்டமைப்புகளுக்கு தேவையான பைப்புகள், மற்றும் அவைகளோடு சேர்த்து 13 வகை பொருட்களையும் வழங்குகிறது. இதற்கு மானிய விலை போக ரூபாய் 700 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நுண்ணீர் பாசன கட்டமைப்பைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 60 செடி, கொடிகளுக்கு நீர் பாசன வசதி செய்து கொள்ளலாம். அதோடு செடிகள் நன்றாக வளர நுண்ணுாட்ட சத்துக்களையும் (micronutrients) வழங்க முடியும்.

தோட்டக்கலை மையங்கள்:

தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, கோபாலபுரம் செங்காந்தள் பூங்கா, மாதவரம் தோட்டக்கலை செயல் விளக்க பூங்கா, அண்ணா நகர் தோட்டக்கலை மூலிகை பண்ணை, வண்ணாரப்பேட்டை தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா போன்ற இடங்களில் தமிழக அரசின் தோட்டக்கலை சார்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி உங்களது வீட்டிலும் தோட்டம் அமைத்து, இயற்கையான மற்றும் சத்தான காய்கறிகளை பறித்து சமைக்கலாம்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மகளிர் சுய உதவிக் குழுவில் வீட்டிற்கு ஒரு பெண்! ஏழைப் பெண்களை தொழில்முனைவோராக்கும் முயற்சி!

கொடைக்கானலில் கருப்பு கேரட்! விவசாயிகளின் புது முயற்சி!

கால்நடை பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

English Summary: Government subsidy for home garden irrigation! Water up to 60 plants at a time Published on: 22 February 2021, 06:51 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.