1. தோட்டக்கலை

நெல் வரப்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? இதோ மாற்று யுக்தி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

நெல் சாகுபடியின்போது, வரப்பில் உளுந்து, தட்டைப் பயறு போன்ற பயறு வகைகளை பயிரிட்டால் பூச்சி மற்றும் நோய்களை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.

நெல் சாகுபடி (Paddy Cultivation)

இது குறித்து புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

  • தற்போது பருவமழை பெய்துள்ளதால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வரப்பில் துவரை, உளுந்து, தட்டைப்பயறு போன்ற பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்து பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்தி பயனடையலாம்.

  • நெல் சாகுபடி மேற்கொள்ளும் வயலின் வரப்பில் ஒரு எக்டருக்கு 3 கிலோ உளுந்து அல்லது தட்டைப் பயறு விதைகளை வரப்பின் ஓரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் விதைக்கலாம். துவரை விதைகளை வரப்பின் ஓரத்தில் விதைக்கலாம்.

Credit : Seithi solai

  • தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் எக்டருக்கு 3 கிலோ பயறு விதை ரூ.150 அல்லது 50 சதவீதம் இதில் எது குறைவோ அந்த அளவு மானியத்தில் வழங்கப்படுகிறது.

  • பயறு வகைப் பயிர்களை வரப்பில் விதைப்பதால் அவற்றை நோக்கி கவரப்படும் பொறிவண்டு போன்ற நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகின்றன. இவை நெற்பயிரைச் சேதப்படுத்தும் தத்துப்பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை தாக்கி கட்டுப்படுத்தும்.

  • பயறு உற்பத்தி அதிகமாகி சாகுபடிச் செலவின்றி மகசூல் கிடைக்கிறது. அவற்றின் தழைகள் ஆடு, மாடுகளுக்குச் சிறந்த புரதச்சத்து மிகுந்த தீவனமாக பயன்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

வேம்பு நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.18,000மானியம்- விவசாயிகளுக்கு வாய்ப்பு!

காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை - ராமநாதபுரம் விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: How to control pests in paddy field? Here is an alternative trick!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.