Krishi Jagran Tamil
Menu Close Menu

பழப்பயிர் சாகுபடி - அன்னாசிப்பழம்

Saturday, 08 December 2018 02:50 PM

இரகங்கள்: கியூ. க்யுன் மற்றும் மரீஷியஸ்

பருவம்: ஜீலை முதல் செப்டம்பர் வரை

மண் மற்றும் தட்பவெப்பநிலை

தட்பவெப்ப நிலையைப் பொறுத்த வரை மிதவெப்பமான மலைப்பகுதி மிகவும் ஏற்றது. கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 700 மீட்டர் வரை நன்கு வளரும். மண்ணின் கால அமிலத் தன்மை 5.5 முதல் 7.0 வரை மிகவும் ஏற்றவை. களிமண் பூமியாக இருப்பின், நல்ல வடிகால் வசதி இருந்தால் பயிர் செய்யலாம்.

பயிர் பெருக்கம்: பக்க கன்றுகள், கொண்டைகள், மேல் கன்றுகள், நடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவைகளுள் பக்க கன்றுகள் தான் பெரும்பாலும் நடவிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இடைவெளி மற்றும் நடவு: இரட்டை வரிசை முறையில் நாற்றுக்களை நடவு செய்யலாம். கன்றுகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 30 செ. மீ ஆகவும் வரிசைகளுக்கு இடையிலுள்ள தூரம் 60 செ. மீ ஆகவும் இரண்டு வரிசைகளுக்கு இடையுலுள்ள தூரம் 90 செ. மீ ஆசவும் இருக்கும்படி நடவேண்டும். சுமார் 300 முதல் 350 கிராம் எடையுள்ள கன்றுகளை தேர்வு செய்து நடவேண்டும். கன்றுகளை வயலில் நடுவதற்கு முன்பு மேன்கோஜிப் 3 சதம் அல்லது கார்பெண்டாசிம் ஒரு சத சலவையில் சுமார் ஐந்து நிமிடங்கள் முக்கி நடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஒரு எக்டருக்கு தொழு உரம் 40 முதல் 50 டன் இடவேண்டும். பின்பு செடி ஒன்றிற்கு யூரியா 16 சிராம் சூப்பர் பாஸ்பேட் 4 கிராம் மியூரேட் ஆப் பொட்டாஷ் 12 கிராம் என்ற அளவில் இரு சமமாகப் பிரித்து கன்று நட்ட ஆறாவது மாதம் ஒரு முறையும் பன்னிரண்டாவது மாதம் ஒரு முறையும் இடவேண்டும்.

நுண்ணுட்டச்சத்துக் குறைபாடுகள்: அன்னாசியில் இரும்புச்சத்து குறைவாடு, துத்தநாகக் குறைபாடு மயில் துத்தக் குறைபாடுகள் காணப்படுவதுண்டு. இவற்றைப் போக்க இலைவழி ஊட்டாக 0.5 சதம் முதல் 1.00 சத சிங்க்சல்பேட் கரைசல் மற்றும் பெரஸ் சல்பேட் கரைசலை 15 சாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

அன்னாசியில் பூக்கள் சீராகப் பூப்பதற்கு, செடியில் 35 முதல் 40 இலைகள் இருக்கும்கோது நாப்தலின் அசிட்டிக் அமிலம் 10 பிபிஎம் கரைசலை 2 சத யூரியா கரைசலுடன் கலந்து செடிக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் குருத்தில் ஊற்றவேண்டும் அல்லது 20 பிபிஎம் எத்ராலுடன் 2 சத யூரியா மற்றும் 0.04 சத சோடியம் கார்பனேட்டை கலந்து செடிக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் இடவேண்டும். பழத்தின் எடையை அதிகரிக்க 200-300 பிபிஎம் நாப்தலின் அசிட்டிக் அமிலம் கரைசலை காய்பிடித்து இரண்டு மூன்று மாதங்களுக்குள் தெளிக்கவேண்டும். இதனால் 12-20 சதம் வரை பழங்கள் பெரியதாகும்.

செடிகளுக்கு மண் அணைப்பது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக மறுதாம்புப் பயிருக்கு மிகவும் அவசியம். ஒவ்வொரு முறை உரமிடும் பொழுதும், அறுவடை முடித்த பின்பும் செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும். பழத்தின் பருமனை அதிகரிக்க காய்பிடித்து ஒன்றிரண்டு மாதங்களில் கொண்டையின் குருத்தைக் கிள்ளி எடுத்துவிடவேண்டும். இதனால் 12-20 சதம் வரை பழங்கள் பெரியதாகும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் இரண்டு மில்லி தெளிக்கவேண்டும்.

அறுவடை

கன்று நட்ட 12 மாதங்கள் பூ வர ஆரம்பித்து 18 மதுல் 24 மாதங்களில் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும். பக்கக் கன்றுகள் மற்றும் நாற்றாங்கால் கன்றுகள் நடும்பொழுது அச்செடிகள் காய்ப்பதற்றகு சுமார் 18 மாதங்கள் ஆகின்றன. அன்னாசி கொண்டைகள் 24 மாதங்களிலும், மேல் கன்றுகள் 22 மாதங்களிலும் காய்ப்பிற்கு வரும். பழங்கள் மஞ்சள் றிநமாக மாறியபின் அறுவடை செய்யவேண்டும்.

மகசூல்: எக்டருக்கு 50 டன் பழங்கள்.

Production method of Pineapple
English Summary: Pineapple production method

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. நுண்ணீர் பாசனத்திற்கு 50%மானியம்- தமிழகஅரசின் தன்னிகரில்லாத் திட்டம்!
  2. விலையில்லா கறவைப்பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
  3. தூத்துக்குடி தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு மானியம் பெற அழைப்பு!
  4. வேளாண் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : சட்ட நகல் எரித்து தமிழகம் முழுவதும் போராட்டம்!
  5. PMSMY: பெண்களை சுய தொழில் செய்பவராக்கும் மத்திய அரசின் திட்டம்- விண்ணப்பிக்க வாய்ப்பு!
  6. கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்- நிவாரணம் தரும் இயற்கை மருந்துவம்!
  7. விவசாயிகளின் நேரத்தை மிச்சப்படுத்த வந்துவிட்டது, வரப்பை வெட்டிப் பூசும் நவீன இயந்திரம்!
  8. கால்நடை மருத்துவம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
  9. தமிழகத்தில் PM-KISAN திட்ட முறைகேடு - ரூ.72 கோடி மீட்பு!
  10. காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை - ராமநாதபுரம் விவசாயிகளுக்கு அழைப்பு!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.