1. தோட்டக்கலை

தர்பூசணியில் அதிக மகசூல் பெற- எளிய வழிமுறைகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
To get high yield in watermelon- Simple steps!
Credit : AARP

கோடை காலத்தில் வெப்பத்தால் ஏற்படும் தாகத்தைத் தீர்க்க உதவும் தர்பூசணியில் அதிக மகசூல் பெறப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்துப் பார்ப்போம்.

தர்பூசணி (Watermelon)

கோடை வரும் முன்னே வறண்ட வானிலையும், வறட்சியும் நம்மை வாட்டி வதைக்கத் தொடங்கிவிடும். அத்தகைய சூழ்நிலையில், நம் தாகத்தைத் தீர்க்க உதவும் பழங்களில் தர்பூசணி முக்கியமானது.

மக்கள் விரும்பும் பழம் (The fruit that people love)

கோடை காலங்களில் மட்டுமே இவை கிடைக்கும் என்பதால், அந்தப் பருவத்தில், வாங்கி சுவைத்திட நாம் அனைவருமே விரும்புவோம்.

மகசூல் பாதிப்பு (Yield impact)

இதை முன்னிட்டு, தமிழகத்தில் பல பகுதிகளில் தர்பாணி சாகுபடி செய்யப்படுகிறது. தர்பூசணியில் அதிக மகசூல் பெற அதிக உரம், அதிக பூச்சி மருந்து, அதிக நீர் ஆகியவற்றை விவசாயிகள் பயன்படுத்தினால் கடும் மகசூல் பாதிப்பு நேரும்.

  • பயிர் வளர்ச்சி ஊக்கி எத்ரல் பயன்படுத்துதல், பரிந்துரைப்படி , முடிந்த வரை கரையும் உரப்பாசனம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் நுனிகிள்ளுதல், ஊடுபயிர் சாகுபடி, தேவைக்கேற்ப நீர்ப்பாசனம், முறையாக சேமித்தல் முதலிய உத்திகள் மகசூலை அதிகரிக்க உதவும்.

  • அதிக நீர் தேங்காத, வளமான மண் உள்ள இடத்தில் நன்கு வளரும் தர்பூசணி கார அமிலத் தன்மை 5 வரையிலும் கூடத் தாங்கி வளரும் தன்மைகொண்டது. ஆனால் அதிக பனியைத் தாங்காது.

  • மித வெப்பம் அளவான ஈரப்பதம், நல்ல சூரிய ஒளி உள்ள காலத்தில் நல்ல காசு பார்க்க தர்பூசணி உதவும்.

  • பழங்கள் முதிர்ச்சி அடையும் போது அதிக வெப்பநிலை இருப்பின் இனிப்புச் சுவை கூடுதலாக வாய்ப்புள்ளது.எனவே ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலும் ஜூன்-ஜூலை மாதங்களிலும் சாகுபடி செய்யவேண்டும்.

  • ஒரு ஏக்கரில் 1,200 கிலோ முதல் 1.400 கிலோ வரைத் தேவைப்படும் குழித்தட்டு முறையில் வளர்த்தால், ஒரு ஏக்கருக்கு 5800 முதல் 6000 நாற்றுகள் தேவைப்படும்.

  • மண் பரிசோதனை ஆய்வு செய்து உரிய உரம் இடுதல் நன்று. அடி உரமாக ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் அல்லது 5 டன் மண்புழு உரம் தேவை.

  • தழைசத்து உரத்தேவையை இதுப் பூர்த்தி செய்யும். மணிச்சத்து 22 கிலோவும் சாம்பல் சத்து 22 கிலோவும் அடி உரமாக இடவேண்டும்.

  • நடவு வயலில் 30X30X30 அளவு குழி எடுத்து அதில் தொழுஉரம் 100 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா தலா 800 கிராம் இடலாம்.

  • 30ம் நாள் செடியிலிருந்து 6-7 செ.மீ இடைவெளிவிட்டு வட்டமாகச் செடியைச் சுற்றி இடவேண்டும்.

  • பூக்கும் தருணம், காய்பிடித்து வளரும் பருவத்தில் பாசனநீர் கொடிகள், இலைகள் மற்றும் பழங்களின் மீது படக்கூடாது.இது தான் நோய்கள் வர மூல காரணமாகும்.

  • அதிக நாட்கள் நீர் பாய்ச்சாமல் மண்ணின் ஈரத்தன்மை மிகக்குறைவான நிலைக்குப் போனதும், திடீரென்று நீர் பாய்ச்சினால், காய்கள் வெடித்து விடும்.

  • அதேபோன்று பழங்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும் தருணத்தில் நீர் பாய்ச்சினால் விற்பனைக்கு பழங்கள் ஏற்றும் போது பழங்களில் வெடிப்பு ஏற்படும். இத்தகைய பழங்கள் விற்காது.

ஊடுபயிர் (Intercropping)

ஊடுபயிராகக் கூட தர்பூசணியை, செடி முருங்கை, மக்காச்சோளப் பயிர்களுக்கிடையில் பயிரிடலாம்.தர்பூசணியில் இரு இலைப்பருவத்தில், எத்ரல் வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் சுத்தமான நீரில்( உப்புத்தன்னைம இல்லாத நீர்) 2.5 மில்லி வீதம் கலந்துத் தெளிக்க வேண்டும். இதனை ஒருவார இடைவெளியில் 3 முறைத் தெளித்தால், காய்ப்பிடிப்புத் திறன் 5 முதல் 7சதவீதம் அதிகரிக்கலாம். இதற்கு முக்கியக் காரணம், பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுதான்.

மேலுரமாக பயிர் முளைத்த 40-ம்நாள் முதுல் ஒருவார இடைவெளியில் 3 முறை நீரில் கரையும் உரங்களை இட வேண்டியது அவசியம்.

சிவப்பு வண்டு (Red beetle)

  • சிவப்பு பூசணி வண்டைக்கட்டுப்படுத்த, கார்பரில் 50% தூள் ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் பயன்படுத்தி, தேமல் நோய் தடுப்புக்கு அதைப் பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சியை ஒரு லிட்டர் நீரில் அசப்பேட் 2 கிராம் அல்லது சிமிடாகுளோர்பிட் 2 லிட்டர் நீருக்கு 1 மிலி வீதம் பயன்படுத்தலாம்.

  • அடிச்சாம்பல் நோய்க்கு நனையும் கந்தகம் ஒரு லிட்டருக்கு 2 கிராம் அல்லது மேன்கோசெப் 2 கிராம் பயன்படும்.

பயன்படுத்தக்கூடாது (Not to be used)

  • கட்டாயம் தாமிரப் பூசணக் கொல்லிகளைப் பயன்படுத்தவோ, லிண்டேன் மருத்தினைப் பயன்படுத்தவோ கூடாது.

  • தர்பூசணியைச் சேமித்து வைக்கும்போது ஆப்பிள், வாழைப் பழங்களுடன் சேர்த்து வைக்கக் கூடாது.

தகவல் 

டாக்டர். பா. இளங்கோவன்

இணை இயக்குநர்

வேளாண்மை மற்றும் பேராசிரியர்,

பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்.

திருச்சி 

மேலும் படிக்க...

தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியம்!

தென்னையில் நோயின் தீவிரத்தைக் குறைக்க - ஊடுபயிராக வாழை!

சிறுதானியங்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்த பள்ளி மாணவர்கள்!

English Summary: To get high yield in watermelon- Simple steps! Published on: 22 March 2021, 08:20 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.