1. தோட்டக்கலை

முழுக்க முழுக்கப் பலன் தரும் முட்டை ரசம்- தெரியுமா உங்களுக்கு?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Whole-effect egg broth - you know what?

Credit : Health Organic Tamil

இயற்கை விவசாயத்தில், பயிர்களுக்கு மிகச் சிறந்த வளர்ச்சி ஊக்கியாக முட்டை எலுமிச்சை ரசம் செயல்படுகிறது.

முட்டை ரசம் (Egg-Solution)

செடிகளில் இலைகள் வெளுத்துப்போவதைத் தடுக்கப் பயன்படும் இந்த முட்டை எலுமிச்சைக் கரைசலைத் தயாரிப்பது குறித்து பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் (Ingredients)

முட்டை                - 10

எலுமிச்சைப்பழம் - 20

பனை வெல்லம்

அல்லது

நாட்டுச்சர்க்கரை - 250 கிராம்

செய்முறை (Recipe)

 • மூடியுள்ள பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 • அதில் 10 முட்டைகளையும், குறுகிய முனை கீழே இருக்குமாறு ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிவிடவும்.

 • இதனுடன் எலுமிச்சைச் சாற்றையும், எலுமிச்சைப்பழத்தோல்களையும் சேர்க்கவும்.

 • முட்டை ஓடுகள் உடையாமல் இருக்க வேண்டும்.

 • காற்று புகாதவாறு டப்பாவின் மூடியை இருக்கமாக மூடி 10 நாட்கள் அப்படியே வைக்க வேண்டும்.

 • பத்து நாட்களுக்குப்பிறகு திறந்து பார்த்தால், எலுமிச்சைச்சாறும், எலுமிச்சைப்பழத் தோலில் உள்ள வீரியமும் முட்டையைக் கரைத்திருக்கும்.

 • முட்டை கூழ் வடிவில் மாறியிருக்கும். முட்டையை அழுத்திப்பார்த்தால், ரப்பர் போல மாறியிருக்கும்.

 • இந்தக் கலவையில் இருந்து முட்டையை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துப் பிசைந்துக் கூழாக்கிக் கொள்ள வேண்டும்.

 • இதனை மீண்டும் எலுமிச்சைச் சாறில் சேர்த்து, அதனுடன் 250 கிராம் பனைவெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரையைச் சேர்ந்த மூடி வைக்கவும்.

 • 20 நாட்கள் கழித்துப் பார்த்தால், முட்டை எலுமிச்சை ரசம் தயார்.

பயன்படுத்தும் முறை (Method of use)

 • முட்டை ரசத்தை வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு, 10 லிட்டர் தண்ணீருக்கு 250 மில்லி வீதம் கலந்து செடிகளுக்குத் தெளிக்க வேண்டும்.

 • இந்தக் கரைசலைப் பாட்டிலில் அடைத்துவைத்துக்கொண்டு, 3 மாதம் வரைப் பயன்படுத்தலாம்.

முட்டை எலுமிச்சைக்கரைசலின் பயன்கள் (Benefits)

 • பயிருக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும், மண்ணை வளப்படுத்தவும் பயன்படுகிறது.

 • செடிகள் மற்றும் பயிர்களின் நுண்ணூட்டச் சத்துக்களை அதிகரிக்க இந்தக் கரைசல் பயன்படுகிறது.

மேலும் படிக்க...

பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!

கணக்கில்லா நன்மை தரும் கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி!

சமவெளி பகுதிகளில், ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி! கவலையில் விவசாயிகள்!

English Summary: Whole-effect egg solution - you know what?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.