1. செய்திகள்

10 ஆண்டுகளின் கோரிக்கை நிறைவேற்றம்! மக்கள் மகிழ்ச்சி!

T. Vigneshwaran
T. Vigneshwaran

TN News

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியில் 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த கோரிக்கையை ஒரே மனுவில் நிறைவேற்ற திமுக எம்எல்ஏ முயற்சி எடுத்தார். இதையடுத்து திமுக எம்எல்ஏவை மக்கள் தூக்கி வைத்து மகிழ்ந்து பாராட்டினார்.

நெல்லை மேலப்பாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் நிறைவேற்றப்படாமல் இருந்த கோரிக்கையான 8 தெருக்களில் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் வகாப் துவக்கி வைத்தார்.

நெல்லை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலம், அதிக மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாகும். இந்த பகுதியில் நாணியப்பா நகர் 8 தெருக்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருகின்றது.

எனவே, உடனடியாக இந்த பகுதி தெருக்களில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து மாநகராட்சியில் அப்பகுதி மக்கள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் புதிதாக பாளையங்கோட்டையில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் அவர்களிடம் நேரில் சந்தித்து நாணியப்பா நகர் 8 தெருக்களில் சாலை அமைத்திட வேண்டுமென்று கோரிக்கை மனுவை வழங்கினர்.

அதையடுத்து, உடனடியாக சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பில் 8 தெருக்களிலும் சாலை அமைக்கும் பணி இன்று முதல் துவங்கப்பட்டது. இந்த பணியில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.  மேலும் ஒரு மாதத்திற்குள் இந்த பணி முடிக்கப்படும் எனவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக புகாரளித்து நடவடிக்கை எடுக்காத இருந்த நிலையில் புதிதாக வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் எடுத்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க:

மாதம் 1 லட்சம் சம்பாதிக்க ஒரு தொழில்? அரசு 35% மானியம் வழங்கும்!

ரூ.182 கோடி கரும்பு நிலுவை தொகைக்கு ஒதுக்கீடு: வேளாண் அமைச்சர்!

English Summary: 10 years of demand fulfillment! People are happy!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.