1. செய்திகள்

ஆதார் அட்டையில் எளிதாக புகைப்படம் மாற்றலாம்: UIDAI ஆதார் தகவல்களை புதுப்பிக்க இதோ எளிய வழி

KJ Staff
KJ Staff

ஆதார் அட்டை என்பது இன்றைய இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. மேலும்  அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களிலும் முக்கிய அடையாளமாக ஏற்று கொண்டதாகும்.

ஆதார் அட்டையில் பிரத்தியேகமாக பயோமெட்ரிக் தகவல்கள் பதிவேற்றம் செய்ய பட்டுள்ளது. அதாவது நமது இருப்பிடம், வயது, கைரேகை, கருவிழி போன்ற பதிவுகள் உள்ளன. மேலும் அனைத்து பிரிவினருக்கும், குழந்தைகளுக்கும் அவசியமானதாக இருந்து வருகிறது.

ஆதார் அட்டையில் ஏதேனும் மற்றம் செய்ய வேண்டுமெனில், அல்லது  ஏதேனும் புதிதாக சேர்க்க வேண்டுமெனில் அல்லது  புகைப்படம் தெளிவாக இல்லையெனில் இனி கவலை பட தேவை இல்லை. இதோ மத்திய அரசு சில வழிமுறைகளை வழங்கியுள்ளது.

ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய விரும்புவார்கள் இரன்டு வழிகளில் செய்யலாம். UIDAI இணையதளத்தில் சென்று மாறுதலுக்கான படிவத்தினை பதிவிறக்கம் செய்து, படிவத்தினை அருகிலிருக்கும்  ஆதார் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டாவது, நேரடியாக ஆதார் அலுவலகம் சென்று மாற்றத்திற்கான விண்ணப்பத்தினை பெற்று தகவல்களை நிரப்ப வேண்டும்.

நேரடியாக நம்மால் எதனையும் மாற்ற இயலாது. ஆதார் அட்டை மாற்றங்கள் யாவும் ஆதார் முகவர்கள் மூலமாக மட்டுமே மாற்ற இயலும். புகைப்படத்தை மாற்ற விரும்புவோர் தங்களது தற்போதைய புகைப்படத்தை எடுத்து செல்லவும்.

ஆதார் அட்டையில் மாற்றம் மற்றும் புகைப்படம் புதுப்பிக்க இதோ வழிமுறைகள்:

  • ஆதார் அலுவலகம் அல்லது ஆதார் முகவர்களை அணுகவும்.
  • UIDAI இணையதளத்தில் மாற்றம் / புதுப்பிக்க தேவையான   படிவத்தினை பெறவும்.
  • தேவையான தகவல்களை கவனமாக நிரப்ப வேண்டும். ஏன்னெனில் விரும்பும் சமயங்களில் மாற்ற இயலாது.
  • நிரப்பிய படிவம் மற்றும் தேவையான பயோமெட்ரிக் தகவல்களை முகவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆதார் அலுவலர் அல்லது முகவர் உங்களுடைய தகவல்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றை பெற்று கொள்வர்.
  • மாற்றுதலுக்கான படிவத்தில் கையொப்பம் இட்டு பின் கட்டணமாக 25 ரூபாய் மற்றும் GST சேர்த்து செலுத்த வேண்டும்.
  • இறுதியாக விண்ணப்பித்ததிற்கான ஒப்புதல் சிட்டு தரப்படும்.  பின் இணையத்தளத்தில் சரிபார்க்கவும்.

அலுவலர்கள் அல்லது முகவர்கள் இல்லாத பட்சத்தில் மண்டல ஆதார் அலுவகத்திற்கு கடிதம் மூலம் தேவையான தகவல்களை அனுப்பி வைக்கலாம். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி,

UIDAI Regional Office

Khanija Bhavan,

No. 49, 3rd Floor,

South Wing Race Course Road,

Bangalore – 560 001

 அனைத்து தகவல்கள் முறையாக அளித்த பிறகு ஒரு முறை சரிபார்க்கவும். 10 - 15 நாட்களில் மாற்றம் செய்யபட்ட புதிய ஆதார் அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்க படும்.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: Aadhar Card News:UIDAI Provides Easiest Way Update Information Also Change Aadhar Photos Published on: 28 May 2019, 05:28 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.