Krishi Jagran Tamil
Menu Close Menu

வருவாய் மற்றும் ஏற்றுமதி இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் திட்டம் வரையறை: 8 மாநிலங்கள் ஒப்புதல்

Tuesday, 07 January 2020 03:06 PM , by: Anitha Jegadeesan
Agriculture Export Policy 2019

இந்திய அரசு விவசாயிகளின் வருவாயையும், ஏற்றுமதியினையும் 2022க்குள் இரட்டிப்பாக்குவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான ஒப்புதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. துறை சார்ந்த பணிகளை கண்காணிக்கும் பொறுப்பினை மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.

மத்திய அமைச்சரவை கடந்த 2019 ஆண்டு முழுவதும் வேளாண் ஏற்றுமதி கொள்கையினை வரையறை செய்வதற்கும், அமலாக்கத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, அடிப்படை வசதிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தித் தொகுப்புகள், திறன்கட்டமைப்பு, பொருள் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய அம்சங்களை தயாரிப்பதற்கு இந்த ஆணையம் செயல் பட்டது. மேலும் வலுவான கட்டமைப்பிற்காக மாநில அரசுகள் மற்றும் துறை சார்ந்தவர்களுடன் தொடர்ச்சியான விவாதகங்கள், கருத்துக்கள்  மற்றும் கூட்டங்களை நடத்தி திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்கவும், வர்த்தகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அதனை சரி செய்யும் உத்திகளை வகுப்பதற்காக  பல சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், உணவு பதனத் தொழில்கள் அமைச்சகம் ஆகியன கலந்து கொண்டன.

Commodity Market

முதல் கட்டமாக 8 மாநிலங்கள் செயல்திட்டத்தை இறுதி செய்துள்ளன. இதர மாநிலங்கள் பரிசீலனையில் உள்ளன. தமிழகம் உட்பட மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், கேரளா, நாகாலாந்து, அசாம், பஞ்சாப், கர்நாடகா ஆகிய 8 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களும், விளைப் பொருட்களும் 

தேசிய அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு களப்பணியில் ஈடுபட்டன. வேளாண் விளைப் பொருள்களின் தொகுப்பு இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு மாநிலங்களையும், விளைப் பொருள்களையும் உறுதி செய்துள்ளனர்.

ஜலந்தர், பஞ்சாப் (உருளைக் கிழங்கு)

பானஸ்கந்தா, குஜராத் (பால் பொருட்கள்)

சாங்லி, மகாராஷ்ட்ரா (திராட்சை)

சோலாப்பூர், மகாராஷ்ட்ரா (மாதுளை)

நாக்பூர், மகாராஷ்ட்ரா (ஆரஞ்ச்)

சித்தூர், ஆந்திர (மாங்கனி)

தேனி, தமிழ்நாடு (வாழைப்பழம்)

சேலம், தமிழ்நாடு (கோழிப்பண்ணைப் பொருட்கள்)

இந்தூர், மத்தியப் பிரதேசம் (வெங்காயம்)

சிக்கபல்லாபூர், கர்நாடகா (இளஞ்சிவப்பு வெங்காயம்)

வேளாண் பொருட்கள் தொகுப்பு நிலைக் குழுக்கள் அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியிட்டுள்ளது.

Agriculture Export Policy 2019 Latest Export Policy India export policy India's share in world agricultural exports apeda agriculture news in Tamil Agriculture Export Policy 2019 in Tamil
English Summary: Agriculture Export Policy: Focus on farmer’s income and Export volume

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. PM Kisan : உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துவிட்டதா இல்லையா?தகவல் இங்கே!!
  2. மனம் மயக்கும் ரோஜா சாகுபடி செய்து எப்படி?- எளிய வழிமுறைகள்!
  3. அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை- மக்களே உஷார்!!
  4. சொட்டுநீர்ப் பாசனக்குழி அமைக்க ரூ.3000மானியம்- விவசாயிகள் பயன்பெற அழைப்பு
  5. PM-Kisan: 8.5 கோடி விவசாயிகளுக்கு 6-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி!!
  6. ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து, வருஷத்திற்கு 4 லட்சம் சம்பாதிக்கலாம் வாங்க! பார்த்தசாரதி சொல்றத கேளுங்க..!
  7. விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
  8. 40% மானியத்தில் காய்கறி விதைகள் தொகுப்பு திட்டம்!- பயனடையுமாறு ஆட்சியர் அழைப்பு!
  9. விவசாயத்தில் இரட்டை லாபம் ஈட்ட வேண்டுமா? வேளாண்மை மீன் வளர்ப்பில் ஈடுபடுங்கள்!
  10. இலக்கை மிஞ்சிய குறுவை சாகுபடி - குவியும் நெல் மூட்டைகள்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.