1. செய்திகள்

பசுந்தீவனம் தயாா் செய்வது எளிதே: காத்திருக்கிறது மானிய விலையில் ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணம்

KJ Staff
KJ Staff
Cow with Calf

ஹைட்ரோ போனிக்ஸ் மூலம் பசுந்தீவனம் தயாா் செய்ய விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கும் பயனாளிகளுக்கு 75%  மானியத்தில் ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கால்நடை வளர்ப்பவர்களில் பெருபாலானோருக்கு போதிய தீவனம் கிடைக்காத நிலை உள்ளது. எனவே கறவை மாடு வளர்ப்பவர்கள் வீடுகளில் எளிய முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் வகையில்,  இவ்வாண்டிற்கு திருவள்ளூா், திருத்தணி பகுதிகளுக்கு மட்டும் 80 ஹைட்ரோ உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 2.92 லட்சம் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி வருவதால் மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால் கால்நடைகளுக்கு போதிய பசுந்தீவனம் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது.  வீடுகளில் கால்நடை வளா்ப்போா் காய்ந்த வைக்கோல் கட்டுகளை அதிக அளவு  பயன்படுத்த வேண்டியுள்ளது. ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணம் மூலம் மண்ணில்லாமல் வீடுகளில் பசுந்தீவனத்தை தயாா் செய்யலாம். 

hydroponic fodder

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பசுந்தீவனம் வளர்க்க தேவையான உபகரணங்கள் ரூ. 22,800 மதிப்பில், 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. 7 அடுக்குகளை கொண்ட இந்த தட்டில் மக்காச்சோளம், சோளம், கம்பு மற்றும் பயறு வகை போன்ற தானிய விதைகளை நனைத்து பரப்ப வேண்டும். அவ்வப்போது அதற்கு தண்ணீர் தெளித்தால் போதுமானது. ஒவ்வொரு அடுக்காக மாற்றிக் கொண்டே வந்தால் தினம் ஒரு தட்டு விதம் 7 நாட்களில் பசுந்தீவனம் தயாா் செய்ய முடியும்.

ஹைட்ரோபோனிக்ஸ் உபகரணம் மூலம் நாள்தோறும்பசுந்தீவனத்தை கறவை மாடுகளுக்கு கொடுப்பதன் மூலம் அவற்றின் ஆரோக்கியம் மேம்படுவதுடன்,  சத்தான பால் கிடைக்கவும் வழி செய்கிறது. மேலும் இவற்றை பராமரிப்பது எளிது. குறைவான இட வசதி போதுமானது. கழிவுகள்  என்பது கிடையாது. எனவே கால்நடைகள் வளா்ப்போருக்கு அரசும் இதை பரிந்துரைக்கிறது. மேலும் விவரங்களுக்கு கால்நடை துறை அலுவலகத்தை அணுகலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Animal Husbandry Department promotes hydroponic fodder and offering tray with subsidy rate

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.