1. செய்திகள்

அரியலூர் மாவட்டம்! விதைப் பந்துகளை வீசிய இளைஞர்கள்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
youngster throwing seed balls on Ariyalur highway

அரியலூர் மாவட்டம் நெரிஞ்சிக்கோரை முதல் நாச்சியார் பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலையோரங்களில் பல்வேறு வகையான விதைப் பந்துகளை இளைஞர்கள் வீசுகின்றனர்.

20-க்கும் மேற்பட்ட நெரிஞ்சிக்கோரை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் , கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டத்தின் பல கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களின் கரைப் பகுதிகள், அரசு புறம்போக்கு இடங்கள், கோயில் வளாகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கான பனை விதைகள், மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறார்கள்.

இவர்கள் சென்னையில் உள்ள தன்னார்வ மையம் ஒன்றின் உதவியுடன் கரோனா காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு உணவுகளையும், குடிசையில் வாழும் மக்களுக்கு தார்ப்பாய், போர்வை போன்ற நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று முடியும்  நிலையில், சாலை விரிவாக்கத்தின்போது சாலையோரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான புளியமரங்கள் வெட்டி வீசப்பட்டன. இதனால், இந்தச் சாலையோரங்கள் முழுவதும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனைக் கண்ட அந்த இளைஞர்கள் சாலையோரங்களில் மரங்களை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் விதைப் பந்துகளைத் தயாரித்து கடந்த 2 தினங்களாக வீசி வருகின்றனர்.

இதற்காக, புளியம், வேம்பு, புங்கன், இழுப்பை உள்ளிட்ட விதைகள் கொண்ட 1,600 விதைப் பந்துகளைத் தயார் செய்து, திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெரிஞ்சிக்கோரை, ரெட்டிப்பாளையம், விளாங்குடி, நாச்சியார்பேட்டை ஆகிய ஊர்களுக்கு இடையேயான சுமார் 10 கி.மீ. தூரத்தின் இருபுறங்களிலும் விதைப் பந்துகளை வீசினர் வருகின்றனர். இனி மழைக்காலம் தொடங்கும் நிலையில், அனைத்து விதைகளும் முளைத்து சாலையோரங்களைப் பசுமையாக்கும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:

Truck Drivers: லாரி டிரைவர்களுக்கு 72 லட்சம் ரூபாய் சம்பளம்!

பொதுமக்களுக்கு நற்செய்தி! ரு.35,000-க்கு கீழ் சென்றது தங்கம்

English Summary: Ariyalur District! Young people throwing seed balls! Published on: 18 September 2021, 12:48 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.