1. செய்திகள்

செப்டம்பரில் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை: RBI அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Banks Holiday in September

Banks Holiday in September

செப்டம்பர் மாதம் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அம்மாதத்தில் 12 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என, ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்று போன்ற பேரிடர் காலத்தில் வங்கிகளின் செயல்பாடுகளை பெற்றுக் கொள்வதில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது வங்கிகள் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆகஸ்ட் மாதத்திலும் 15 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

12 நாட்கள் விடுமுறை

இன்னும் 4 நாட்களில் துவங்கவுள்ள செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விடுமுறை தின பட்டியலை வெளியிட்டுள்ளது. எனவே, வங்கி விடுமுறைகளை பொறுத்து வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏடிஎம்களில் (ATM) பணத் தட்டுப்பாடு ஏற்படலாம். வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், இந்த காலத்தில் தேவை இருக்கும் பட்சத்தில் பண நெருக்கடி ஏற்படலாம். ஆக முன்னதாகவே பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம். செலுத்த வேண்டிய இடங்களுக்கும் முன்னதாக செலுத்தி விடலாம்.

Also Read | வீட்டுக் கடனுக்கு சலுகை அறிவிப்பு: மூன்று ஜாக்பாட்!

விடுமுறை நாட்கள்

  • செப்டம்பர் 5, 12, 19, 26ம் தேதிகளில் ஞாயிறு விடுமுறை.
  • செப்டம்பர் 11ம் தேதி, 2வது சனிக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி
  • செப்டம்பர் 25 ஆம் தேதி 4வது சனிக்கிழமை.
  • செப்டம்பர் 8ம் தேதி - ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு கவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது.
  • செப்டம்பர் 9ம் தேதி - தீஜ் தினத்தை முன்னிட்டு ஹரித்தாலிகா மற்றும் கேங்டாக் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • செப்டம்பர் 10ம் தேதி - விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தொடர்ந்து அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • செப்டம்பர் 17ம் தேதி - கர்ம பூஜையை முன்னிட்டு ராஞ்சியில் வங்கிகள் இயங்காது.
  • செப்டம்பர் 20ம் தேதி - இந்திரஜத்ரா பண்டிகை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
  • செப்டம்பர் 21ம் தேதி - ஸ்ரீ நாராயண குரு சமாதி நாளை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க

வீட்டுக் கடனுக்கான வட்டி குறைவு: 15 வங்கிகள் அறிவிப்பு!

English Summary: Banks holiday for 12 days in September: RBI announcement!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.