1. செய்திகள்

ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!

R. Balakrishnan
R. Balakrishnan
MK Stalin
Credit : Daily Thandhi

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு (Full Curfew) உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 24ந்தேதியில் இருந்து 31ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு படிப்படியாக ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 5 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் தொற்று பரவல் நன்றாக குறைந்து வருகிறது.

6வது ஊரடங்கு

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 28ந்தேதி முடிகிறது. இந்த நிலையில் 6வது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் இன்று தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

இதில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில், தமிழகத்தில் வருகிற ஜூலை 5ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தளர்வுகள்

  • அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் 9 மணிவரை நடைபயிற்சி (Walking) செய்ய அனுமதி
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
  • அனைத்து துணிக்கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க அனுமதி
  • அனைத்து நகை கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க அனுமதி
  • அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
  • வங்கி, காப்பீடு நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
  • உடற்பயிற்சி கூடங்கள், யோகா நிலையங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால், திங்கட்கிழமையில் இருந்து கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகள், வீட்டு உபயோக மின்சார கடைகள், போட்டோ, வீடியோ ஜெராக்ஸ் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம்.

  • 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி.
  • 23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கடைகள் இயங்க அனுமதி
  • சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் ஜவுளிகடைகள் நகை கடைகள் திறக்க அனுமதி

மேலும் படிக்க

85 நாடுகளில் பரவியது டெல்டா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு தகவல்!

கருப்பு பூஞ்சை நோயை சமாளிக்க தமிழகத்தில் மருத்துவ குழு தயார்!

English Summary: Curfew extended in Tamil Nadu till July 5! What relaxations! Published on: 25 June 2021, 09:28 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.