1. செய்திகள்

தென்னைக்கு ஆழ நடவு அவசியம்

KJ Staff
KJ Staff

தமிழகத்தை தாக்கிய கஜா புயலில், காவிரி டெல்டா மாவட்டங்களில் 50 இலட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் விழுந்து விட்டன. தென்னை மரங்கள் இந்த அளவிற்கு விழுந்துள்ளதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் குமார் அவர்கள் கூறிய காரணம் வருமாறு:

கஜா புயலினால் காவிரி டெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களுக்கு இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதே சமயத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் உள்ள தென்னை மரங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் அங்கு தென்னங் கன்றுகளை நடவு செய்வதற்கு 3 அடி ஆழமுள்ள குழிகள் எடுத்து அவைகளில் ஒரு அடி உயரத்திற்கு மேல் மண், மணல், மக்கின தொழு உரம் ஆகியவைகளை கலந்து போட்டுவிட்டு, பின்னர் அந்த நடவு குழிகளில் 2 அடி ஆழத்தில் தென்னங் கன்றுகள் நடவு செய்யப்பட்டிருந்தன. அவ்வாறு 2 அடி ஆழத்தில் நடவு செய்யப்பட்டிருந்த அந்தத் தென்னை மரங்களில் அதிக எண்ணிக்கையில் வேர்கள் வந்திருந்தன. அந்த வேர்கள் மண்ணுக்குள் அதிக ஆழமாக ஊடுருவிச் சென்றிருந்தன. அதன் காரணமாக அந்தத் தென்னைகள் புயலில் சாய்வது தவிர்க்கப்பட்டுள்ளது. இப்போது கஜா புயலில் சாய்ந்துள்ள தென்னை மரங்களில் பெரும்பாலானவை ஒரு அடி ஆழத்தில் நடப்பட்டவைகளாகும். அவைகளின் வேர்கள் மண்ணில் மேலோட்டமாக வளர்ந்திருந்தன. அவைகள் மண்ணுக்குள் ஆழமாகச் செல்லவில்லை அதனால் தான் அவைகள் புயலில் சாய்ந்து விட்டன. எனவே இனிமேல் தென்னங்கன்றுகளை நடும்போது விவசாயிகள் ஆழ நடவு செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியம் என்று துணைவேந்தர் கூறினார்.

துணை வேந்தர் கூறியபடி தென்னங்கன்றுகளை ஆழ நடவு செய்வதற்கான சரியான வழிமுறை பற்றி தென்னைக்கு ஆழ நடவு அவசியம் என்ற இந்தக் கட்டுரையில் விவரிக்கப் பட்டுள்ளது.

English Summary: Deep planting is necessary for Coconut

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.