1. செய்திகள்

விவசாயிகள் நலனுக்காகப் பாடுபட வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

Credit: ANI

அனைத்து மாநில அரசுகளும் விவசாயிகள் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டம்(NITI Aayog meet) 

டெல்லியில் நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் (NITI Aayog meet) பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத், நிதி ஆயோக் அதிகாரிகள், மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதில் விவசாயம் உற்பத்தி மனித வள மேம்பாடு தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

2 கோடி வீடுகள்  (2 crore houses)  

ஒருங்கிணைந்த செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. நமது நாட்டை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். ஏழைகளுக்கு வீடுக் கிடைக்க செய்வதே நமது இலக்கு. தற்போது நாடு முழுவதும் 2 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

பைப் குடிநீர் ((Pipe drinking water)

புதிய வீடு கட்டுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கச் செய்வதற்காக உழைத்து வருகிறோம். ஜல்ஜீவன் திட்டங்கள் மூலம் கிராமங்களில் பைப் மூலம் (Pipe Line) குடிநீர் வழங்கப்படுகிறது.

நற்சான்றிதழ் (Certificate)

மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவதன் மூலம் கூட்டாட்சி தத்துவம் இன்னும் அர்த்தமுள்ளதாக மாறும். கொரோனா காலத்தில் மத்திய , மாநில அரசுகள் இணைந்து பணியாற்றின. இதன் மூலம் உலகளவில் இந்தியாவிற்கு நற்பெயர் உருவாகியுள்ளது.

2021 மத்திய பட்ஜெட் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள், தங்களின் பங்களிப்பை அளித்துவருகிறது. தன்னிறைவு இந்தியா திட்டத்திலும் தனியார் நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். சுயசார்பு இந்திய உலகத்திற்கு உதவும்.

குறைந்த வரி (Low tax)

உலக நாடுகளில் இந்தியாவில் தான் குறைந்தளவு வரி விதிக்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகள், தங்களது பட்ஜெட்டை சிறந்த முறையில் அமல்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக அனைத்து மாநில அரசுகளும் உழைக்க வேண்டும். கொரோனா காலத்திலும், நமது விவசாய ஏற்றுமதி அதிகரித்தது.

மிகப்பெரிய மாற்றம் (The biggest change)

இளைஞர்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளனர். வீட்டில் இருந்து பணி செய்வதன் மூலம் தொழிலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிதாகத் தொழில் செய்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க...

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுமா?

நல்லபாம்பு விஷத்தின் மதிப்பு தெரியுமா?

PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!

English Summary: Farmers should work for welfare - PM Modi appeals!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.