
Theaters, Schools, Colleges Open
கொரோனி வைரஸால், தியேட்டர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது இவற்றைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 23 ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களும், செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதித்து தமிழக அரசு இன்று (ஆக.21) உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை (Lockdown) அறிவித்துள்ளது. தற்போதைய ஊரடங்கு வரும் 23ம் தேதி உடன் முடிவடைய நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு வரும் செப்டம்பர் 6-ம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது.
அனுமதி
இது தொடர்பாக தமிழ அரசு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு,
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது, வரும் 23 ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரையில் இயங்க அனுமதி
கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி. பூங்காக்கள் படகு இல்லங்கள் இயங்க அனுமதி கடற்கரை கடைகளின் பணியாளர்கள் சிறுவியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செப்.,1 ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் மதிய உணவு வழங்குவதற்கு அனுமதி. மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதி , பொறுப்பாளர்கள், மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.
உரிய வழிகாட்டு நெறி முறைகளின் படி மதிய உணவு திட்டம் செயல்பட அனுமதி
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்திற்கு அனுமதி. நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பேருந்துகளை இயக்க வேண்டும்.
தங்கும் விடுதிகள் கேளிக்கை விடுதிகளில் உள்ள மது கூடங்கள் செயல்பட அனுமதி
செப்., 1 -ம் தேதி முதல் கல்லூரி மற்றும் அனைத்து பட்டய படிப்புகல்லூரிகள் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி
செப்., 1-ம் தேதி முதல் 9,10,11,12 ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
எல்.கே.ஜி., முதல் முதல் 8 வது வரையிலான வகுப்புகளை திறப்பது குறித்து செப்.,15 ம் தேதிக்கு பின்னர் ஆலோசித்து அறிவிக்கப்படும்.
100 சதவீத பணியாளர்களுடன் ஐ.டி., நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
இரு டோஸ் தடுப்பூசி செலுத்தினால் உயிரிழப்பு குறைகிறது: ஆய்வில் தகவல்!
Health Tips: ஆண்களின் கனிவான கவனத்திற்கு!
Share your comments