1. செய்திகள்

PM Kisan திட்டத்தின் 7வது தவணை விரைவில்! விவசாயிகளே இன்றே விண்ணப்பித்திடுங்கள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டு வரும் தொகையில் 7வது தவணையை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றனர். கடந்த முறையில் முறைகேடாக தனி நபர்களும் விவசாயிகள் போர்வையில் இணைந்ததை தவிர்க்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

பி.எம் கிசான் திட்டம்

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) கீழ், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாயை மூன்று தவணைகளில் ரூ.2000 வீதம் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணமானது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான 6வது தவணையாக சுமார் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000 வீதம் மத்திய அரசு செலுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு 7-வது தவணையை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, இது வரை இந்த திட்டத்தின் கீழ், விண்ணப்பித்து பயன் பெறாத விவசாயிகள் தற்போது பதிவு செய்து உங்ளுக்கான தவணையை பெற்றிடுங்கள். பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் பெயர்களை எவ்வாறு எளிதாக பதிவு செய்யலாம் என்பதை இப்போது பார்போம்.

கிசான் திட்டத்தில் ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

நீங்கள் பதிவு செய்யும் பணியைத் தொடங்குவதற்கு முன், உங்கள் விவசாய நிலத்தின் ஆவணங்கள், ஆதார் அட்டை, புதுப்பிக்கப்பட்ட வங்கி கணக்கு, முகவரி ஆதாரம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின் ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்

  • முதலில் PM- Kisan - னின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் https://pmkisan.gov.in/

  • பின் Farmers corner-என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில், ''New Farmer Registration'' என்பதை கிளிக் செய்யுங்கள்.

  • இதன் பின் வரும் புதிய பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணை பதிவிடுங்கள்

  • தொடர்ந்து உங்கள் மாநிலம் அல்லது மாவட்டம், பெயர், பாலினம், வகை, ஆதார் அட்டை தகவல், பணம் மாற்றப்படும் வங்கி கணக்கு எண், அதன் ஐஎஃப்எஸ்சி (IFSC)குறியீடு, முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி போன்ற அனைத்து விவரங்களையும் நிரப்பவும். நீங்கள் காஸ்ரா எண், எவ்வளவு நிலம் போன்ற நில விவரங்களையும் கொடுக்க வேண்டும்.

  • இந்த தகவல்களை பூர்த்தி செய்த பின்னர், படிவத்தை சமர்ப்பிக்கவும்.

Credit : Mint

கிசான் திட்டத்தில் நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்ள்

https://pmkisan.gov.in/RegistrationForm.aspx


உங்கள் ஆதான் தொடர்பான விவரங்களை புதுப்பிக்க இங்கே கிளிக் செய்திடுங்கள்

https://pmkisan.gov.in/UpdateAadharNoByFarmer.aspx


உங்களின் வங்கிக் கணக்கு நிலை குறித்து அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx

பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை எப்போது?

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளில் ரூ .6000 விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதற்கான முதல் தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. இரண்டாவது தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், மூன்றாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும் விவசாயிகளின் கணக்கிற்கு செலுத்தப்படுகிறது.

மேலும் படிக்க..

பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும் - விவரம் உள்ளே!!

விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!

காற்று மாசுபாட்டை தடுக்க டிராக்டர்களுக்கும் நெறிமுறைகள் வகுப்பு!

English Summary: Government to Transfer Next Installment of PM Kisan Yojana Soon Know How to Register and other updates inside

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.